கர்ப்பமாக இருக்கும் போது ஏன் தாலி பிரித்து கோர்க்க கூடாது தெரியுமா?

97

கர்ப்பமாக இருக்கும் போது ஏன் தாலி பிரித்து கோர்க்க கூடாது தெரியுமா?

பொதுவாக திருமணமான பெண்ணுக்கு 1,3,5 மாதங்களில் தாலி பிரித்து கோர்க்கும் ஒரு சம்பிரதாயம் நடக்கும். காலங்காலமாக நமது முன்னோர்கள் இந்த தாலி பிரித்து கோர்க்கும் சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றனர். இந்த தாலி பிரித்து கோர்க்கும் போது திருமணத்திற்கு எடுத்த பட்டு புடவை, வேஷ்டியை புதுமண தம்பதிகள் அணிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நல்ல நேரம் பார்த்து தம்பதியினரை கிழக்கு முகமாக உட்கார வைக்க வேண்டும்.

அதன் பிறகு மணப்பெண் கழுத்திலிருக்கும் தாலிக்குப் பதிலாக ஒரு மஞ்சள் கயிற்றை கட்டிய பிறகு திருமணத்தின் போது மாப்பிள்ளை கட்டிய தாலியை அவிழ்த்து அதில், காசு, முத்து பவளம் குண்டு ஞானக் குழாய் ஆகியவற்றை சேர்த்து மஞ்சள் கயிறு அல்லது தாலி செயினுடன் சேர்த்து கட்டி விடப்படுகிறது.

இதையடுத்து, சுமங்கலி பெண்கள் ஒவ்வொருவராக வந்து தம்பதியினரை ஆசிர்வாதம் செய்வது வழக்கம். புது செயினில் திருமாங்கல்யத்தை அணிந்து கொண்ட பிறகு சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், புஷ்பம் ஆகியவற்றுடன் ஒரு ஜாக்கெட் துண்டு வைத்து கொடுக்கலாம்.

இதுவே வசதியானவர்கள் சுமங்கலி பெண்களுக்கு புடவையும் கொடுக்கிறார்கள். சிலர் முதியோர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள். இதன் மூலம் தானம் பெற்றவர்கள் மனமும், வயிறும் நிறைந்து உங்களை வாழ்த்துவார்கள். நீங்கள் எப்போதும் தீர்க்க சுமங்கலியாக வாழ்வீர்கள். பிரித்து எடுத்த மஞ்சள் கயிற்றினை அதான் தாலியை கண்ணில் ஒற்றிக் கொண்டு பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், குழந்தை பிறந்த தும் குழந்தைக்கு கட்டி விடலாம். சிலர் அதனை பத்திரமாகவும் வைத்திருப்பார்கள்.

இந்த தாலி பிரித்து செய்யும் சம்பிரதாயம் திருமணமான பெண் கர்ப்பமாக இருந்தால் செய்யமாட்டார்கள். அதனால், தான் இந்த சம்பிரதாயத்தை 3 அல்லது 5 மாதங்களில் செய்து விடுகின்றனர். இன்னும் சிலர், திருமணமான 15 நாட்களில் கூட செய்கின்றனர்.