கஷ்டங்கள் தீர ஆடி கிருத்திகை விரதம், வழிபாடு!

99

கஷ்டங்கள் தீர ஆடி கிருத்திகை விரதம், வழிபாடு!

ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரங்களில் முருகனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் வரும் ஆடி கிருத்திகை தான். வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள், துன்பங்கள், பிரச்சனைகள் நீங்க ஆடி கிருத்திகை நாளில் முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பு. இவ்வளவு ஏன், திருமணத்திற்கு நல்ல வரன் அமையவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், வேலை தேடுவோருக்கும், கை நிறைய சம்பளத்தில் பதவி உயர்வு பெறவும் இந்த ஆடி கிருத்திகை நாளில் முருகனை மனமுருகி வழிபட்டு வர நினைத்தது நிறைவேறும்.

விஷாக நட்சத்திரத்தில் தான் முருகன் பிறந்தார். எனினும், முருகனை பாலூட்டி, சீராட்டி வளர்த்த ஆறு கார்த்திகைப் பெண்களும், கார்த்திகை நட்சத்திரமாக மாறிய நாளை ஆடி கிருத்திகை நாளாக கொண்டாடுகிறார்கள். முருகப் பெருமானுக்கு திதி உகந்தது என்றால் அது சஷ்டி. கிழமையில் உகந்த து வெள்ளி.

ஆனால், நட்சத்திரத்தில் உகந்தது என்றால் அது கிருத்திகை தான். அதுவும் ஆடி கிருத்திகை இன்னும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆடி மாதத்தில் ஆரம்பித்து தொடர்ந்து 6 மாதங்கள் வரை கார்த்திகை விரதம் இருந்து தை மாதம் வரும் கார்த்திகையில் இந்த விரதத்தை முடித்துக் கொள்ளலாம். அப்படி செய்தால் கை மேல் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

விரதம் இருப்பவர்கள் உப்பு சேர்த்துக் கொள்ளக் கூடாது. உப்பில்லா உணவு எடுத்துக் கொண்டு சஷ்டி மற்றும் கார்த்திகை விரதம் இருந்தால் அது இன்னும் பலன் கொடுக்கும். ஆனால், உடல்நிலை சரியில்லாதவர்கள், சாப்பிடாமல் இருக்க முடியாதவர்களும் 3 வேளையும் சாப்பிட்டு கூட முருகப் பெருமானை வழிபட்டு வரலாம். விரதம் இருப்பவர்கள் காலையிலேயே குளித்து முடித்து வீட்டில் விளக்கேற்றி தீபாரதனை காண்பித்து முருகனை நினைத்து ஓம் முருகா அல்லது சரவணப என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே வழிபட வேண்டும்.

மாலை 6 மணிக்கு வீட்டில் 6 மண் அகல் விளக்கை ஏற்றி வைத்து முருகப் பெருமானை வழிபடுவது நல்லது. முருகனுக்கு பசும் பாலில் நாட்டுச் சர்க்கை போட்டு நெய்வேத்தியம் படைக்கலாம். அப்படி இல்லை என்றால் சர்க்கரைப் பொங்கல் படையிலிட்டு முருகனை நினைத்து வழிபட்டு உங்களது விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

ஆடி மாதத்தில் ஆரம்பித்து இப்படி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 6 மாதங்கள் என்று தை மாதம் வரை விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட்டு வரை உங்களது அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம்.