காசு, பணத்தை எங்கு வைத்தால் கூடிக் கொண்டே இருக்கும் தெரியுமா?

179

காசு, பணத்தை எங்கு வைத்தால் கூடிக் கொண்டே இருக்கும் தெரியுமா?

கையில வாங்குனே பையில போடல காசு போன இடம் தெரியல என்று புலம்புபவர்கள் எத்தனையோ பேர். அப்படி புலம்புபவர்களின் பட்டியலில் நீங்கள் இருக்க கூடாது என்று நினைத்தால் இதை மட்டும் செய்து வாருங்கள். அப்புறம், பையில் போட்டுக் கொண்டே இருப்பீர்கள் என்று நான் சொல்லவில்லை, சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பொதுவாக ஏழை, பணக்காரன் என்று பாகுபாட்டிற்க்கு எல்லாம் காரணம் பணம் தான். ஏழை இன்னும் ஏழை ஆகிக் கொண்டே இருக்கிறான். பணக்காரன் இன்னும் பணக்காரனாகிக் கொண்டே இருக்கிறேன். நம்மில் பலருக்கும் வரவை விட செலவு தான் அதிகமாக இருக்கும். நாம் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி உழைக்கும் பணமானது, நம் கையில் நிலைக்காமல் இருப்பதற்கு ஜாதக ரீதியாக எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால், உண்மையில் சாஸ்திர ரீதியாக உங்களது அலட்சியம் மட்டுமே அதற்கு முக்கியமான காரணமாக இருக்க முடியும்.

சரி அதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன வழிகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். சிலர் கஞ்சனா இருப்பார்கள், சிலர் செலவாளியாக இருப்பார்கள். அப்படி செலவு செய்பவர்களாக இருந்தால், பணம், மீண்டும் மீண்டும் கண்டிப்பாக உங்களைத் தான் தேடி வந்து கொண்டே இருக்கும். செலவாளியாக இருந்தால் எப்படி நம்மிடம் வரும் என்று கேட்கிறீர்களா?

நீங்கள் செலவு செய்யும் பணமானது, சுயநலத்திற்காக அல்லாமல், பொது நலத்திற்காகவே செலவு செய்து வந்தால், அந்த பணமானது உங்களைத் தான் தேடி தேடி வரும். அதன் மூலமாக மீண்டும் மீண்டும் பொது நலத்திற்கே செலவு செய்வீர்கள். அதோடு, உங்களது சுயநலமும் பூர்த்தி ஆகும்.

பணத்தை செலவும் செய்ய வேண்டும், அவ்வப் போது சேமிக்கவும் வேண்டும். எப்போதும், சேமிக்க மட்டும் செய்தால், அது எப்பொழுதும் நம்மிடம் நிலைத்திருக்காது. அது வீண் விரையமாகிக் கொண்டே இருக்கும். நல்ல விஷயத்திற்காக செலவு செய்வதும், நம் தேவைக்கு என்று சேமித்து வைப்பதும் தான் பணத்தை மென் மேலும் பெருக்குவதற்கான ஒரே வழி.

இது மட்டுமல்லாமல், இன்னும் சில வழிகளும் உண்டு. அது என்ன என்று கீழே பார்ப்போம்.

  1. தேக்கு மரத்திற்கு தேக்கி வைக்கும் ஆற்றல் உண்டு என்று கூறுவார்கள். அப்படி தேக்கு மரத்தால் செய்யப்பட்ட பெட்டியில் பணத்தை வைத்தால் அது மென்மேலும் பெருகும். அப்படி தேக்கு பெட்டி செய்ய முடியாவிட்டால், சிறிய தேக்கு மர துண்டு ஒன்றை பணம் இருக்கும் இடத்தில் பணத்தோடு வைக்க வேண்டும்.
  2. நகைக் கடைகளில் நகையை மடித்துக் கொடுப்பதற்கு ரோஸ் நிறத்தில் ஆன பேப்பர் ஒன்றை பயன்படுத்துவார்கள். இது பெண்கள் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஏனென்றால், நகை மீது அதிக ஆசை கொண்டவர்கள் பெண்கள். ஒரு டப்பாவில் அந்த ரோஸ் நிற பேப்பரை வைத்து அதோடு, சேமிக்கும் பணத்தையும், நாணயங்களையும் வைக்க வேண்டும். இப்படி செய்தால், பணம் பெருகும்.
  3. பணத்தை தேக்கி வைக்கும் தேக்கு மரத் துண்டு, மகாலட்சுமி தேவிக்கு வாசம் என்றால் பிடிக்கும். ஆதலால், ஜவ்வாது பவுடர் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதோடு, அடிக்கடி பயன்படுத்தாத தங்க நகை ஒன்றையும் கூடவே வைத்துக் கொள்ளுங்கள். தேக்கு, ஜவ்வாது, தங்கம், நாணயம், பணம் ஆகியவற்றுடன் ஒரு சிறிய புதிய கண்ணாடியையும் சேர்த்து வைத்தால், பணமானது கொட்டோ கொட்டோ என்று கொட்டும் என்பது நம்பிக்கை.

இப்படியெல்லாம் செய்யும் போது நமக்கே பணம் மீது அதிகளவில் ஆசை வருவதோடு, பணத்தை அதிகமாக சேமிக்க வேண்டும் என்று ஆவலும் அதிகரிக்கும். இதைத் தான் பணத்தை சேர்ப்பதற்கான சூட்சுமமாக சாஸ்திரங்களும், ஜோதிட வல்லுநர்களும் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.