கார்த்திகை 3ஆவது சோமவாரம்: சங்கடங்களை தீர்க்கும் சங்காபிஷேக வழிபாடு!

138

கார்த்திகை 3ஆவது சோமவாரம்: சங்கடங்களை தீர்க்கும் சங்காபிஷேக வழிபாடு!

ஒவ்வொரு ஆண்டும் வரும் கார்த்திகை மாதங்களில் வரும் திங்கள் கிழமை சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் நடைபெறும். இந்த ஒவ்வொரு திங்கள் கிழமையையும் சோமவாரம் எனப்படும். சங்கு என்றால், பவித்ரா புனிதமானது என்ற ஒரு பெயரும் இருக்கிறது. அதில், விடப்படும் தீர்த்தமானது மிகவும் புனிதமானது.

நிலம், நீர், காற்று, ஆகாயம், வானம் ஆகிய பஞ்சபூதங்களால் மாறுபடாதது. நீரில் கிடைக்கும். நெருப்பால் உருமாறாது. இதில் உள்ள துவாரத்தின் வழிபாக காற்றைச் செலுத்தினால், சுநாதமான ஒலியை வழங்கும். அதனால், தான் கார்த்திகை மாதங்களில் வரும் சோமவாரங்களில் அனைத்து சிவன் கோயில்களிலும் சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த சங்காபிஷேகத்திலும் வலம்புரிச் சங்கு மிகவும் விஷேசமானது. லட்சம் இடம்புரி சங்குகள் கிடைத்தால் வலம்புரி சங்கு ஒன்று கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீபமானது, சூர்யாக்னி, கார்த்திகை அக்னி மற்றும் அங்காரக அக்னி ஆகிய 3 சேர்ந்த நாளில் ஏற்றி வைக்கப்படுகிறது.

கார்த்திகை மாதம் முழுவதும் சிவபெருமானை தீப ஒளியினால் குளிப்பாட்ட வேண்டும் என்கிறது சிவாகம சாஸ்திரம். தீப ஒளியினால் ஏற்படும் வெப்பத்தை ஈடுசெய்யவும், சிவரூபத்தை குளிரூட்டவும், சங்கினால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

கடலிலிருந்து கிடைக்கும் சங்கு, பாற்கடலிலிருந்து தோன்றிய சந்திரனின் அம்சமாக போற்றப்படுகிறது. சங்கினால் நிரப்ப ப்படும் தீர்த்தமானது மேலும் குளிர்ந்து அதனைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படும் போது சிவபெருமான் மனம் குளிர்ந்து பக்தர்களுக்கு வளமான வாழ்க்கை அளிப்பார் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இன்பங்களுக்கு அதிபதி சந்திர பகவான். சோமன் என்ற பெயரும் பெற்றவர். ஔஷதம் என்ற மருந்துப் பொருட்களுக்கும், மூலிகைகளுக்கும் அதிபதி. இப்படிப்பட்ட சந்திர பகவானின் அம்சமாக திகழும் சங்கு கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்படும் போதும், அதனைக் காண்பதும், எல்லையற்ற இன்பங்களையும், நோயற்ற வாழ்க்கையும் அமையும் என்பது ஐதீகம்.