கால பைரவர்: பைரவாஷ்டமி, மகாதேவ அஷ்டமி!

171

காள பைரவர்: பைரவாஷ்டமி, மகாதேவ அஷ்டமி!

பழங்காத்தில் கோயில்களில் சன்னதி பூட்டியதும், சாவியை பைரவர் சன்னதியில் வைத்துவிட்டு சென்றுவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். பைரவர் முன் வைக்கப்பட்டிருக்கும் சாவியை தொட்டவர்கள் யாரும் உயிருடன் இருந்ததில்லை. அந்தளவிற்கு சக்தி வாய்ந்த பைரவரை வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி. அதிலும் கார்த்திகை அஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

காள பைரவர் (கால பைரவர்):

தாருகாசுரன் சிவனிடம் சாகா வரம் வேண்டும் என்று கேட்டான். அதற்கு சிவனோ உயிரோடு இருக்கும் ஒவ்வொன்றிற்கும் இறப்பு உண்டு என்றார். உடனே ஆணவத்துடனும், அகங்காரத்துடனும் ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக் கூடாது என்ற வரம் பெற்றான். ஒரு கட்டத்தில் தாருகாசுரனின் அழியும் காலமும் வந்தது. பார்வதி தேவியோ, ஆலகால விஷத்திலிருந்து கறை படிந்த சுடர் ஒன்றை உருவாக்கி அந்த சுடரை பெண்ணாக உருமாற்றி அதற்கு காளி என்று பெயரிட்டாள்.

8 குழந்தை பைரவர்:

அந்த காளி தேவியோ, தீயாக மாறி தாருகாசுரனை சுட்டெரித்தது. அந்த தீயை காளி குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டி சீராட்டினார். பின், சிவன், காளி மற்றும் அந்தக் குழந்தையை தனது உடலுடன் வைத்துக் கொண்டார். அப்போது சிவனின் உடலிலிருந்து 8 குழந்தைகள் உருவானது. அந்த 8 குழந்தையையும் ஒன்றாக்கி அதற்கு பைரவர் என்று பெயரிட்டார். காளத்தை (விஷம் – பாம்பு) தனது உடலில் அடக்கிய அந்த 8 மடங்கு சக்தி கொண்ட குழந்தைக்கு காளபைரவர் என்று பெயர் வந்தது. காலப்போக்கில் அது கால பைரவர் என்றானது. சிவன் மற்றும் பார்வதி தேவியார் கால பைரவரை காவல் தெய்வமாக்கினர்

நாய்க்கு வேறு பெயர்:

அதன்படி, ஒவ்வொரு சிவாலயங்களிலும் காவல் தெய்வமாக காக்கும் கடவுளாக பைரவர் இருந்து வருகிறார். சிங்கம், யானை, மயில், மூசிகன், காளை என்று ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தெய்வங்களும் தங்களது வாகனங்களாக கொண்டிருக்க பைரவரோ நாய் வாகனம் கொண்டிருக்கிறார். இன்பம், துன்பம் என்று வாழ்க்கையில் நாம் எதை அனுபவித்தால் இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது வேத தத்துவம். அந்த வேதத்தின் வடிவமாக கருதப்படுக்கும் நாய்க்கு வேதஞாளி என்ற பெயர் உண்டு.

பைரவாஷ்டமி:

ஒவ்வொரு சிவாலங்களிலும் பைரவரை காவல் தெய்வமாக கடைசியாக வழிபடும் பக்தர்கள், பைரவரை மூலவராக கொண்டுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகட்டூரில் கோயில் கொண்டுள்ள பைரவரை முதலில் தரிசனம் செய்கின்றனர். இங்கு பைரவாஷ்டமி மிகவும் சிறப்பாக நடைபெறும்.

தேய்பிறை மகாதேவ அஷ்டமி:

இதே போன்று கேரளா மாநிலம் மகாதேவர் கோயிலில் கார்த்திகை தேய்பிறை அஷ்டமி மகாதேவ அஷ்டமி என்ற சிறப்பு பெயரில் நடைபெறுகிறது. திருப்பாச்சியில் கோயில் கொண்டுள்ள திருநோக்கிய அழகியநாதன் ஆலயத்தில் பைரவர் இரட்டை நாய்களுடன் வாசம் செய்கிறார். பைரவரை வழிபட்டு வந்தால் நமது கஷ்டங்கள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.