கீரி கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா?

64

கீரி கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா?

 1. கீரி பாம்பை கொல்வது போன்று கனவு வந்தால் உங்களுக்கும், உறவினர்களுக்கும் இடையில் இருந்த பகை விலகும்.
 2. கீரிப்பிள்ளை கனவில் வந்தால் எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

குரங்கு கனவில் வந்தால்…

 1. குரங்கு கனவில் வந்தால் விரோதிகளால் பிரச்சனையும் அதனால், துன்பமும் ஏற்படும்.
 2. ஒன்றுக்கும் அதிகமான குரங்குகள் கனவில் வந்தால் வீட்டிலோ அல்லது நண்பர்களிடமோ வாக்குவாதங்கள் ஏற்படும்.
 3. குரங்கு துரத்துவது போன்று கனவு வந்தால் பகைவரால் துன்பம் உண்டாகும்.

கரடி கனவில் வந்தால்…

 1. கரடி உங்களை துரத்துவது போன்று கனவு வந்தால் நல்ல சகுனம் கிடையாது.
 2. கரடி கனவில் தேன் குடிப்பது போன்று கனவு வந்தால் நல்ல செய்திகள் வந்து சேரும்.
 3. கரடியை கொல்வது போன்று கனவு வந்தால் கெட்ட செய்திகள் வரும்.

மற்ற காட்டு விலங்குகள் கனவில் வந்தால்:

 1. காண்டாமிருகம் கனவில் வந்தால் சோர்வு நீங்கி உடல் பலம் பெரும்.
 2. மான் கனவில் வந்தால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள், பிரச்சனைகள் விலகும்.
 3. மானை வேட்டையாடுவது போன்று கனவு வந்தால் பொருள் சேதம் ஏற்படும்.
 4. ஒட்டகம் கனவில் வந்தால் நமது பயணத்தில் பிரச்சனைகள் வரும்.