குடித்துவிட்டு மனைவி துன்புறுத்தும் குடிகாரர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?

163

குடித்துவிட்டு மனைவி துன்புறுத்தும் குடிகாரர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?

உலக உயிர்கள் பூலோகத்தில் வாழுகின்ற பொழுது, செய்கின்ற பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கமும் நரகமும் கிடைக்கும் என்பதும், நரகத்திற்குச் செல்கின்றவர்கள் பல்வேறு விதவிதமான தண்டனைகளைப் பெறுவார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் என்னென்ன பாவங்களுக்கு என்னென்ன தண்டனைகள் என்ற விவரங்கள் நமக்குத் தெரிவதில்லை. அது பற்றி மிக விளக்கமாக கருட புராணம் சொல்கிறது.

கருட புராணம் என்பது பரம்பொருளாகிற விஷ்ணு பகவான் தன்னுடைய வாகனமாக கருட வாகனத்தில் ஏறி உலகை வலம் வந்து கொண்டிருந்தராம். அப்போது அவருடைய வாகனமாக கருடன் திரும்பி விஷ்ணுவைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாராம். எம்பெருமானே! மனிதர்களின் இறப்புக்குப் பின்னர் என்ன தான் நடக்கும் என்று கேட்டாராம். அந்த கருடனின் கேள்விக்கு விஷ்ணு பகவான் சொன்ன பதில் தான் கருட புராணம். அப்படி அந்த கருட புராணத்தில் என்னென்ன சொல்லியிருக்கிறார் விஷ்ணு என்று தெரியுமா?

கருட புராணத்தில் மனிதன் இறந்த பிறகு, அவர்களுடைய உடலில் இருந்து பிரிந்த உயிரானது, எங்கு செல்கிறது, என்ன செய்கின்றது, சொர்க்கம் நரகம் போன்ற விஷயங்களும், சொர்க்கத்துக்கு யாரெல்லாம் போவார்கள், நரகத்துக்கு யார் செல்வார்கள் என்றெல்லாம் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அதில் என்ன பாவங்கள் செய்தவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று கருட புராணத்தில் கூறியிருப்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்து மதத்தைப் பொருத்தவரையில், சைவ மற்றும் வைணவ புராணங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுவது தான் கருட புராணம். கருட புராணம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று உலக உயிர்களின் மரணத்துக்குப் பின்பாக உள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் ஈமறுபிறவி ஆகியவற்றைப் பற்றி விரிவாக விளக்குகிறது.

அதோடு மட்டுமல்லாது, வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தினக் கட்டமைப்புகள் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது. இவற்றில் மொத்தம் பத்தொன்பதாயிரம் செய்யுள்கள் கொண்டது. இதன் இரண்டு பிரிவுகளையும் பூர்வ கந்த மற்றும் உத்தர கந்தம் என இரண்டாகப் பிரிக்கலாம்.

கணக்குப்பிள்ளை:

கொடிய தண்டனை மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் செய்த பாவ புண்ணியங்களை எமலோகத்தில் வசிக்கும் சித்ரகுப்தன் என்னும் கணக்குப்பிள்ளை தனது நோட்டில் குறித்து வைத்திருப்பார். இந்த பாவத்தின் தன்மைக்கு ஏற்ப எமதர்மன் தனது கிங்கர்களின் மூலம் தண்டனைகளை நிறைவேற்றுவார் என்றும் 28 கொடிய நரகங்களைப் பற்றியும் அங்கு கொடுக்கப்படும் தண்டனைகளைப் பற்றியும் பட்சி ராஜனான கருடனுக்கு விளக்கமாக கூறுகிறார் மகாவிஷ்ணு.

மற்றவர்களுடைய மனைவியை விரும்புதல்:

அடுத்தவர்களுக்குச் சொந்தமான, மற்றவர்களுடைய மனைவியை விரும்புதல் அல்லது அபகரிப்பு செய்வது, அடுத்தவர்களுடைய குழந்தையைப் பறித்துக் கொள்ளுதல், மற்றவர்களுடைய பொருள்களை ஏமாற்றிப் பறித்துக் கொள்ளுதல் போன்ற பாவங்களைச் செய்வதும் மிகப்பெரிய குற்றமாகச் சொல்லப்படுகிறது.

இந்த குற்றங்களைச் செய்தால், அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையின் பெயர் என்ன தெரியுமா? அந்த தண்டனையின் பெயர் தாமிஸிர நரகம். தாமிஸிர நரகம் என்னும் தண்டனை என்பது, எமலோக நரகத்தில் எமதர்மரின் பணியாட்களாக இருக்கிற எமகிங்கரர்கள் புடைசூழ்ந்து, பெரிய பெரிய முட்களால் ஆன கட்டைகளாலும் பெரிய பெரிய கதைகளாலும் அடித்துக் கொடுமைப்படுத்துவார்கள். இதுதான் தாமிஸிர நரகம் என்னும் தண்டனை.

பெரியவர்களை இகழ்ந்து பேசினால்:

நம்மை விட பெரியவர்களை இகழ்ந்து பேசினாலோ நீச மொழிகளினால் பேசினாலோ பாவம் ஏற்படும் என்றும் அந்த பாவத்திற்கு தண்டனையாக வாயில் இருந்து புழுக்கள் உருவாகும் என்று கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இனிய மொழிகளை பேசினால் உடல் நலத்துடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. பிற உயிர்களை வாட்டி வதைத்தவர்கள் துன்பப்படுவார்கள் என்றும் கொடூரமான சரீரம் கிடைக்கும் என்னும் மகாவிஷ்ணு தனது பக்தனும் பெரிய திருவடியுமான கருடனிடம் கூறியுள்ளார்.

கும்பி பாகம்:

தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்ரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம். பெரியோரையும், பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.

தன் தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும். அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக் கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.

கிருமி போஜனம்:

சித்திரவதை, துரோகம், கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம் அந்தகூபம். தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து, பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.

மோக வெறியர்களுக்கு தண்டனை:

பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால் அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினி குண்டம். கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும் மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம். நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டு எல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.

ஒழுக்கமற்றவர்களுக்கு தண்டனை:

அதிகார வெறியாலோ, கபடவேசத்தாலோ, நயவஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி. கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தன வழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும் கயவர்கள் அடையும் நரகம் பூயோதம். பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரியும் கொடுமைக்காரர் அடையும் நரகம் பிராணரோதம்.

பிராணிகளை வதைத்தவர்களுக்கு தண்டனை:

எவ்விதத் தீமையும் செய்யாதவர்களைக் கொல்லுதல், நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம். தன்னை மட்டுமே பெரியதாய் மதித்து பெரியோரையும், நல்லோரையும் அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.

நரமேத யாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.

விருந்தினரை வெறுத்தவர்களுக்கு தண்டனை:

செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும், பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து, அறநெறிகளில் செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம். வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும் பகிர்ந்துண்ண விரும்பாத சுயனலவாதிகாலும் அடையும் நரகம் பரியாவர்த்தனகம். தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம். பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரேவதம் என்பதாகும்.

குடிகாரர்களுக்கு தண்டனை:

வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்கு ஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம். குடிகாரர்களுக்கு நரகம் வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவா வதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.

பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள் அடையும் நரகம் அவீசி. எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம். டம்பத்திற்க்காக பசு வதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.