குடும்ப பிரச்சனை தீர்க்கும் வாழைத்தண்டு நார் திரி!

119

குடும்ப பிரச்சனை தீர்க்கும் வாழைத்தண்டு நார் திரி!

பெண்கள் அனைவரும் வீடுகளில் விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதுவும் செவ்வாய் மற்றும் வெள்ளியன்றால் சொல்லவே வேணாம். வீட்டிலும் விளக்கு ஏற்றி பூஜை செய்துவிட்டு கோயிலுக்கும் சென்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்வார்கள்.

பொதுவாக வீட்டில் திரி போட்டு விளக்கு ஏற்றும் போது கிழக்கு தோசை நோக்கி ஏற்றி வைக்க வேண்டும். நாம், ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எந்தெந்த திரியில் விளக்கு ஏற்றினால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

சாமிக்கு காட்டப்படும் தீபங்கள் என்னென்ன தெரியுமா?

மஞ்சள் துணி திரி:

புதிய மஞ்சள் துணியில் திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை கோளாறு, தீயசக்திகளின் தொந்தரவுகள் நீங்கும். அனைத்து வியாதிகளும் குணமாகும்.

பருத்தி பஞ்சு திரி:

இந்த திரி போட்டு விளக்கு ஏற்றினால் மங்களம் பெருகும். பித்ருக்களால் ஏற்பட்ட சாபம் நீங்கும்.

16 வகையான தீபங்கள் என்னென்ன தெரியுமா?

வாழைத்தண்டு திரி:

வாழைத் தண்டு நாரைக் கொண்டு செய்யப்பட்ட திரி போட்டு விளக்கு ஏற்றினால் குடும்ப பிரச்சனைகள் நீங்கும். நிலம் தொடர்பான பிரச்சனைகள் அகலும்.

சிவப்பு துணி திரி:

சிவப்பு துணியில் திரி போட்டு விளக்கு ஏற்றினால் திருமணத் தடை நீங்கும். மேலும், குழந்தைப் பாக்கியமும் கிடைக்கப் பெறும்.

எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? எத்தனை நாட்கள் ஏற்ற வேண்டும்?

வெள்ளைத் துணி திரி:

வெள்ளைத் துணியை திரியாக திரித்து அதனை பன்னீரில் நனைத்து பயன்படுத்தினால் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும். மேலும், தெளிவான சிந்தனைகள் உருவாகும்.

தாமரைப் பூ திரி:

தாமரைப் பூ தண்டைக் கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால் முன் வினைக் கர்ம பாவங்கள் நீங்கும். வாழ்க்கை வளப்படும்.

பணப் பிரச்சனையை நீக்கும் வெள்ளெருக்கு திரி!

வெள்ளெருக்கு திரி:

வெள்ளெருக்கம் பட்டையால் செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும், செல்வ வளம் அதிகரிக்கும்.

  1. பட்டு நூல் திரி கொண்டு விளக்கு ஏற்றினால் எல்லாவிதமான சுபங்களும் கிடைக்கும்.
  2. ஆமணக்கு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் செல்வம் சேரும்.
  3. நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் எம பயம் நீங்கும்.
  4. தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்ற தேக ஆரோக்கியம் பெறும். மேலும் செல்வம் அதிகரிக்கும்.
  5. இலுப்ப எண்ணெய்யால் தீபம் ஏற்றிட தேக ஆரோக்கியம் கூடும். செல்வ நிலை உயரும்.
  6. நெய் தீபம் ஏற்றிட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
  7. அகல் விளக்கு கொண்டு தீபம் ஏற்றி வழிபட சக்தி பெருகும்.
  8. எள் கொண்டு நல்லெண்ணெய்யால் தீபம் ஏற்றி வழிபட சனி தோஷம் நீங்கும்.
  9. வெண்கல விளக்கு வைத்து தீபம் ஏற்றினால் செய்த பாவங்கள் நீங்கும்.

விளக்கு ஏற்றி வழிபட்ட பிறகு தீபத்தை பூவால் தான் அணைக்க வேண்டும். தீபத்தை வாயினால் ஊதக் கூடாது. தீப சரஸ்வதி என்று 3 முறையும், தீப லட்சுமி என்று 3 முறையும், தீப துர்கா என்று 3 முறையும், குல தெய்வத்தை நினைத்து 3 முறையும் என்று மொத்தமாக 12 முறை தீபத்தை வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.