கோயிலில் தீபாராதனை காட்டும் போது கண்களை மூடிக் கொண்டு இறைவனை வழிபடலாமா?

178

கோயிலில் தீபாராதனை காட்டும் போது கண்களை மூடிக் கொண்டு இறைவனை வழிபடலாமா?

பொதுவாக கோயிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது சிறந்தது. அப்படி கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து இறைவனை மனதார நினைத்து வழிபாடு செய்யலாம். எந்தவொரு நல்ல காரியம் செய்ய ஆரம்பித்தால் கெட்ட விஷயங்கள் பற்றி பேசக் கூடாது. உதாரணமாக, சுப காரியங்கள் குறித்து பேசும் போது எள் அல்லது எண்ணெய் பற்றி பேசக் கூடாது.

பேசினால் சுபம் தடைபடும். குங்குமத்தை நெற்றியில் வைக்கும் போது வலது கை மோதிர விரலில் எடுத்து வைத்துக் கொள்வதே நல்லது. மகாலட்சுமி நிற்கும் நிலையில் உள்ள படம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். ஏனென்றால் நிற்கின்ற நிலையில் உள்ள எந்த தெய்வமும் உடனுக்குடன் பலன் தரும் என்பது ஐதீகம்.

கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் தொழ கூடாது. தீபாராதனை நடக்கும் போது கண்களை மூடிக் கொண்டு வணங்கக் கூடாது. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோயில்களுக்கு சென்றால் அங்கிருந்து நேராக வீட்டிற்குத் தான் வர வேண்டும். வேறு எங்கும் செல்லக்கூடாது. பெண்கள் மாதவிலக்கின் போது பூ வைக்க கூடாது.

செவ்வாய் மற்றும் புதன் கிழமை பகல் நேரத்திலும் வெள்ளிக்கிழமை முழு நாளுமே குத்து விளக்கைத் துலக்கக் கூடாது. ருத்ராட்சம் அணிந்திருப்போர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும். சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. சனி பகவான் கடவுளுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது.

அர்ச்சனை செய்ய பயன்படுத்தும் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது. கோயிலுக்கு குளித்துவிட்டு செல்வது நல்லது. எக்காரணம் கொண்டும் கோயிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் குளிக்கக் கூடாது. தேவைப் பட்டால் கோயிலில் இருந்து வந்து சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம்.

எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்ற கூடாது. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். இறந்தவர்களின் படங்களை, சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம்.

வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் குடிக்க கூடாது. புனித தீர்த்தங்களில் இறங்கும் போது குளத்தின் தீர்த்தத்தை தலையில் தெளித்து அனுமதி வாங்கிய பிறகு குளத்தில் கால்களை வைக்க வேண்டும். அது போல கோயிலுக்குள் செல்லும் முன்பு கால்களை கழுவி விட்டு செல்வது நல்லது. இறைவனை தரிசித்து விட்டு வந்த பின்னர் கால்களை கழுவுதல் கூடாது. பூஜை அறையில் தெய்வங்களை வடக்கு திசை பார்த்து வைக்கக் கூடாது.

கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.கோயிலுக்குள் செல்லும் போது, கோயில் வாசலில் பிச்சை கேட்பவர்களுக்கு தானம் செய்வது சிறந்தது. அதாவது அந்த தானம் செய்த தர்ம பலனுடன் இறைவனை தரிசிக்க வேண்டும். கோயிலில் சென்று இறைவனை தரிசித்து விட்டு வறியவர்களுக்கு தானம் செய்வது நல்ல பலனை அளிக்காது.

நல்ல காரியங்களை செய்ய இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும். வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே அனைவது தான் நல்லது நாம் அணைக்கக் கூடாது. திருக்கோயிலின் பிரதான வாசல் வழியே தான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.