கோயில்களில் ஏன் பொங்கல் வைத்து வழிபடுகிறோம்?

85

கோயில்களில் ஏன் பொங்கல் வைத்து வழிபடுகிறோம்?

நமது முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் ஹோட்டல்கள் என்னவோ கிடையாது. அன்றாடம் சமையல் செய்யும் உணவுகளைத் தான் அவர்கள் சாப்பிட்டு வந்தனர். மேலும், கூழ், பழைய சோறு பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவை தான் அவர்களது அன்றாட உணவு முறையாகவும் இருந்தது. அப்போதுள்ள கோயில்களில் பக்தர்களின் பசியாற்றுவதற்கு அன்னதானம் வழங்குவார்கள். அன்னதானம் வழங்கமுடியாத சிறு சிறு கோயில்களில் பக்தர்களுக்கு பசி எடுத்தால் அவர்கள் வீட்டிற்கு தான் சென்று சாப்பிட வேண்டும்.

அப்படியும் இல்லையென்றால், நகர்ப்புறங்களில் உள்ள ஹோட்டல்களுக்கு சென்று உணவு நன்றாக இருக்கிறதோ இல்லையோ சாப்பாடு கிடைத்தால் போதும் என்ற நிலையில் இருந்து சாப்பிட்டு ஆக வேண்டும். அதனால்தான், நமது முன்னோர்கள், சிறு கோயில்களுக்கு செல்லும்போது, பொங்கல் வைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கையோடு கொண்டு செல்வார்கள். கோயிலுக்கு சென்றபிறகு அங்கு கிடைக்கும் செங்கற்களை கொண்டு அடுப்பு போன்ற வடிவத்தில், அடுக்கி, வறட்டிகளை அல்ல‍து சுள்ளிகளை எடுத்து செங்கல் அடுப்பிற்குள் வைத்து, மண்ணெண்ணெய் சிறிது ஊற்றி, தீக்குச்சி கொண்டு நெருப்பு மூட்டுவார்கள். அதன்பிறகு அதன்மீது பானையை வைத்து, தண்ணீர் ஊற்றி, பொங்கல் வைப்பார்கள். அது வெண்மை பொங்கலாகவோ அல்லது சர்க்கரை பொங்கலாகவோ இருக்கும்.

நீண்ட தூரம் பயணம் செய்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பசியெடுக்கும் போது அவர்களுக்கு பிரசாதமாக அந்த பொங்கல் வழங்கப்படும். ஆக பொங்கல் வைப்பது என்பது பக்தர்களின் பசியை போக்குவதற்கு தான். நமது முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு அர்த்தம் இருந்தது. வளர்ந்து வரும் நாகரீக வாழ்க்கையில் அந்த பழக்க வழக்கம் எல்லாம் மறைந்துவிட்டது. நாமும், அதனை மறந்து வருகிறோம்.

மேலும், நாம் இருக்கும் இட த்திற்கு கொண்டு வந்து கொடுப்பதற்கு நிறைய பல ஹோட்டல்கள் தயார் நிலையில் இருக்கும் நிலையில், நாமும், அதனையே விரும்பி ஆர்டர் செய்து அதனை சாப்பிடுகிறோம். இன்றைய காலகட்டங்களில் கூட இன்னும் சில கோயில்களில் இந்த வெண்பொங்கல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. சமைக்கும் உணவுகளில் வெண் பொங்கல் வைப்பது தான் மிகவும் எளிமையானது. அதோடு, அது விரைவாகவும் சமைத்து முடிக்க கூடியது. ஆகையால், தான் கோயில்களில் வெண் பொங்கல் வைக்கிறார்கள்.