கோயில்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைக என்னென்ன தெரியுமா?

119

கோயில்களில் தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைக என்னென்ன தெரியுமா?

உடலில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் தன்மை கால் பாதத்தில் உள்ளது. வெறும் காலுடன் கோயிலுக்கு செல்வதற்கு இதுதான் காரணம். அதோடு, சாமிக்கு மாலை அணிந்து வெறும் காலுடன் நடக்க சொல்வதற்கும் இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இதனால், கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்றும் கூட ஐயப்ப பக்தர்கள் சபரிமலை வாசனை நினைவில் கொண்டு அவனை பாடுவதுண்டு. வீதிகளில் உள்ள சின்னச்சிறு கல், மணல்கள் பாதங்களில் உள்ள நாடி நரம்புகளில் குத்துவதால் இயற்கையாகவே வியாதிகள் வராமல் இருக்கும். இருக்கும் வியாதிகள் கூட சரியாகும்.

இதுதான் சீனாவில் அக்கு பஞ்சர் எனும் ஊசியால் குத்தும் வைத்திய முறை. தீ மிதிப்பதால் ஏற்படும் சூடு உச்சம் தலைக்கு ஏறும். இதனால், இதயம் ஆரோக்கியம் அடைகின்றது. மன பயம் நீங்கும். துணிச்சல் பிறக்கும். பல நோய்கள் குணமடைகின்றது. நரம்புத்தளர்ச்சி பிரச்சனையும் சரியாகிறது.

மேலும், பலவீனமான நரம்புகள் சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது. இரத்த அழுத்தங்கள் குறையும். பயத்தினால் ஏற்படும் இதய துடிப்பு பிரச்சனையும் சரிசெய்யப்படுகிறது. உடலில் ஏற்படும் எண்ணற்ற நோய்களுக்கு பயம் தான் காரணம். அந்த பயத்தை தீ மிதிக்கும் முயற்சி சரி செய்கிறது.