கோயில் குளங்களில் ஏன் சில்லறை போடுகிறார்கள் தெரியுமா?

109

கோயில் குளங்களில் ஏன் சில்லறை போடுகிறார்கள் தெரியுமா?

நம்மில் பலரும் கோவில் குளங்களில் சில்லறை காசுகள் இருப்பதை பார்த்திருப்போம். சிலர் காசு வீசுவதையும் பார்த்திருப்போம். ஏன் இப்படி செய்தார்கள் என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? ஆம், நாம் முன்னோர்கள் எந்த ஒரு செயலையும் ஆன்மீகம், அறிவியல் ஆகியவற்றை ஒன்றுபடுத்தி செய்துள்ளனர். சரி இப்படி அவர்கள் செய்ததற்க்கான அற்புதமான உண்மை என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இறைவனுக்கு காணிக்கையாகவும், கோயில் குளங்களை தூர்வார வரும் ஏழைகளுக்கு இந்த காசு உதவியாக இருக்கும் என்பதற்காகவும் குளங்களில் நாம் பயன்படுத்தும் சில்லறைக் காசுகளை வீசுகின்றனர் என்றே பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மை அது அல்ல. நமது முன்னோர்கள் காலத்தில் அன்றாடம் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்துமே செம்பு உலோகத்தால் செய்யப்பட்டவை.

மேலும் நீர் அருந்துவதற்கும், குளிப்பதற்கும் செம்பு பாத்திரத்தில் இருக்கும் நீரையே உபயோகித்தனர். இதனால் மனஅழுத்தம் எதுவுமில்லை, உடல் ஆரோக்கியம் அதிகமாக இருந்தது, நோய் எதிர்ப்பு சக்தி கூட நம் முன்னோர்களுக்கு அதிகம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதுமட்டுமல்லாமல் அக்காலத்தில் சில்லறை காசுகள் அனைத்தும் செம்பு உலோகத்திலேயே செய்யப்பட்டன.

எனவே கோயிலுக்கு சென்று வழிபட்ட நமது முன்னோர்கள் தங்களின் தோஷத்தை போக்குவதற்கு மட்டுமல்லாமல் கோயில் குளத்தில் இருக்கும் நீரை சக்தி வாய்ந்ததாக மாற்றவும், தங்களிடமிருந்த செப்புக் காசுகள் சிலவற்றை அக்குளத்தில் வீசும் பழக்கத்தை கடைப்பிடித்தனர். இப்படி பலரும் சில்லறை காசுகளை குளத்தில் வீசியதால் அவை குளத்தில் நன்கு ஊறி, அந்த செம்பில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் அந்த நீரில் சேர்ந்து அந்த நீரில் கிருமிகள் வளர்வதை தடுத்ததோடு, அக்குளத்தின் நீரைக் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்திய வர்களுக்கு ஆரோக்கியத்தை தந்தது.

மேலும் செம்புக்கு மலட்டுத் தன்மையை போக்கும் சக்தி அதிகம். எனவே அக்காலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத ஆண்கள் செம்பு காசுகள் நிரம்பி இருக்கும் கோவில் குளத்தில் நீராடி, இறைவனை வழிபட்டனர். இந்த வழிபாடு குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்க உதவியதாக கூறினர். ஆனால் தற்போது செம்பில் காசுகள் தயாரிக்கப்படுவது நின்று, இரும்பு உலோகங்களில் காசுகள் செய்யப்படுகின்றன. ஆனால் அறிவியல் உண்மையை தெரியாதவர்கள் செம்பு காசுகளுக்கு பதிலாக இரும்புக் காசுகளை கோயில் குளங்களில் போடும் பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.