சக்கரத்தாழ்வாருக்கு பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் தெரியுமா?

61

சக்கரத்தாழ்வாருக்கு பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் தெரியுமா?

திருமால் கையில் வைத்திருக்கும் ஸ்ரீ சக்கரத்தைத் தான் சக்கரத்தாழ்வார் என்று கூறுவார்கள். இந்த சக்கரத்தை வழிபட துன்பம் தீரும். தனது பக்தனான பிரகலாதனை காப்பதற்காக திருமால், நரசிம்மராக அவதாரம் எடுத்தார். அந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்று கூறுவார்கள். ஏனெனால், அவர் கருடன் உடனும் வந்திருக்கமாட்டார், தாயின் கருவிலிருந்தும் வந்திருக்கமாட்டார்.

பிரகலாதனுக்காக ஓடோடி வந்த நரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்கரத்தாழ்வாருக்கு பின்புறத்தில் இருக்கிறார். எப்போதெல்லாம் கஷ்டம் வருகிறதோ அப்போதெல்லாம் சக்கரத்தாழ்வாரிடம் சொல்லிவிட பின்னால் இருக்கும் நரசிம்மர் வந்து நமது குறைகளை தீர்ப்பார்.

சக்கரத்தாழ்வாரை 6, 12, 18, 24 என்ற எண்ணிக்கையில் வலம் வருதல் வேண்டும். சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும். சக்கரத்தாழ்வார் மற்றும் நரசிம்மரை வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். இதன் காரணமாக சக்கரத்தாழ்வாருக்கு பின் நரசிம்மர் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஓம் நமோ நாராயணா…