சனி என்றால் குளிர்ச்சியா?

95

சனி என்றால் குளிர்ச்சியா?

சனி என்றாலே ஒன்று சனிக்கிழமையை சொல்வார்கள் அல்லது அந்த சனி பகவானே சொல்வார்கள். இதென்னா மூன்றாவதாக குளிர்ச்சி என்று சொல்றீங்க. அப்படின்னா? உடலிலுள்ள வெப்பத்தை வெளியேற்றி குளிர்ச்சியுடன் இருக்கவே தினமும் நீராட அதான் குளிக்க வேண்டும் என்பது தான் சனி நீராடு என்பதன் அர்த்தமாம். ஆனால், இன்னும் ஒரு சிலரோ சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

இவ்வளவு ஏன், ஔவையாரே சனி நீராடு என்று சொல்லியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு வந்தால், சனி நீராடு என்றால் சனிக்கிழமை தலைக்கு குளிப்பது இல்லை என்று சொல்லுறீங்க…

பொதுவாக சனி நீராடு என்ற ஆத்திச்சூடிப் பாடலுக்கு சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து குளி என்பதும், குளிர்ந்த தண்ணீரில் குளி என்பதும் பொருளாக கருதப்பட்டு வந்தது. திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் சனி என்ற பொருளுக்கு காரி என்ற பொருளும் உண்டு என்கிறார்.

அதோடு, காரி என்றால் விடியல். இருள் நீங்கா பொழுது என்று கூறுகிறார். வைகறை அல்லது விடியற்காலையில் நீராடு என்று உரை எழுதியிருக்கிறார். ஆதலால், தான் அதிகாலையில் நீராடுங்க என்று சொல்லப்படுகிறதாம். சனி நீராடு என்பதற்கு இப்படியும் ஒரு பொருள் உண்டு என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.