சபரிமலைக்கு மாலை அணிவித்து விரதமிருப்பவர்கள் என்ன கடைபிடிக்க வேண்டும்?

113

சபரிமலைக்கு மாலை அணிவித்து விரதமிருப்பவர்கள் என்ன கடைபிடிக்க வேண்டும்?

 1. ஐப்பசியில் மலை பொழிந்து மண்ணெல்லாம் குளிர்ந்து கிடக்க, கார்த்திகை பிறக்கும் முதல் நாளின் அதிகாலையில் குளித்து ஐயப்பனுக்கு மாலை அணிந்து மண்டல விரதம் இருப்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அற்புத ஆன்மீக அனுபவம்.
 2. சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணியும் பலரும் அவரவர் போக்கில் மாலை அணிந்து, ஐயப்பனை தரிசிக்க செல்கிறார்கள். அப்படிச் செல்லக் கூடாது.  மலைக்கு மாலை அணிவித்து விரதமிருப்போர் கடைபிடிக்க வேண்டியவை என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
 3. துளசி மணி மாலை தான் ஐயப்பனுக்கு உகந்தது. அவரவர் வசதிக்கேற்ப துளசி மணி மாலையைத் அணிந்து கொள்ளலாம். செம்பிலோ, வெள்ளியிலோ, மணிகளைக் கட்டினால், நம் ஆயுள் முழுவதுக்கும் அந்த மாலையை பயன்படுத்தலாம்.
 4. பொதுவாக ஒவ்வொரு முறையும் சபரிமலைக்கு செல்லும் போது ஒரே மாலையை அணிந்து செல்வது சிறப்பு. அந்த மாலை தொடர்ந்து சபரிமலைக்கு சென்று வரும்போது அது ராஜ முத்திரையை போல மகத்துவம் பெறுகிறது.
 5. விரதம் இருப்பதைப் பொறுத்தவரை சைவ உணவை அவரவரின் உடலுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம்.
 6. கன்னிசாமிகள் கண்டிப்பாக கறுப்பு வண்ண உடையையே அணிய வேண்டும். காலில் காலணிகள் இல்லாமல் நடந்து பழக வேண்டும். எப்போதும் மனம், வாக்கு, செயல் மூன்றிலும் ஐயப்பனை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லோரிடமும் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். சுடு சொற்கள் சொல்லக் கூடாது.
 7. மாலை போட்ட நாள் முதல் விரதத்தை முடிக்கும் வரையில் முடிவெட்டுதல், சவரம் செய்தல் கூடாது.
 8. மெத்தை, தலையணை உபயோகிக்காமல் வெறும் தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும்.
 9. மற்றவர்களிடம் சாந்தமாக பழக வேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.
 10. விரத நாட்களில் பெண்களை சகோதரியாகவும் தாயாகவும் கருத வேண்டும். விரத காலத்தில் பிரம்மச்சாரியத்தை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.
 11. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மாதவிலக்கானால் அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருக்க வேண்டும். வசதி இல்லையென்றால் மாலை போட்டவர்கள் வேறு இடத்தில் தங்கிக் கொள்ள வேண்டும்.
 12. இருமுடி கட்டும் வைபவத்தை தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.
 13. ஐயப்பனுக்கு மாலை போட்டுவிட்டால் தலைக்கு எண்ணெய் வைக்கவும் கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கவும் கூடாது.
 14. ஐயப்ப பக்தர்கள் பகல் நேரத்தில் தூங்க கூடாது. ஒருவேளை தூங்கினால் மீண்டும் குளித்த பின்னரே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும். ஐயப்ப பக்தர்கள் வீட்டைத் தவிர வெளியிடங்களில் சாப்பிடக் கூடாது.
 15. மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் எழுந்து பச்சைத்தண்ணீரில் குளிக்க வேண்டும். குளித்து முடித்து பின் விபூதி இட்டு விளக்கு ஏற்றி ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி வணங்க வேண்டும். இதே போன்று மாலையில் சூரிய அஸ்மனத்திற்கு பின் குளித்து காலையில் செய்ததைப் போன்று செய்ய வேண்டும்.
 16. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரதமிருந்து தான் என்னும் அகங்காரத்தை ஒழித்து இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்து ஒரு முகமாக வழிபட்டால் இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும்.
 17. படிகள் ஏற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள்.
 18. இந்த வழிமுறைகளை கடைபிடித்து விரதம் முடிந்து மலைக்கு கிளம்பும் முன் பஜனை, கூட்டு வழிபாடு, பூஜை நடத்தி பிரசாதம் தந்து உணவளிப்பது சிறப்பு. வீடு, கோயிலில் இருமுடிக்கட்டு பூஜை செய்யலாம். கிளம்பும் முன் போய் வருகிறேன் என்று சொல்லக் கூடாது. வீடு திரும்பியது குருசாமி மூலம் மாலை கழற்ற வேண்டும், இருமுடி அரிசியை எல்லோருக்கும் சமையல் செய்து பிரசாதமாக கொடுக்க வேண்டும். விரதகாலத்தின் போது வழங்கிய நற்பழக்கவழக்கங்களை ஆயுள் முழுவதும் பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் ஐயப்பனின் அருள் கிடைக்கும்.