சஷ்டி விரதம் – முருகனே பிள்ளையாய் பிறப்பான்!

133

சஷ்டி விரதமிருந்தால் முருகனே பிள்ளையாய் பிறப்பான்!

வியாழக்கிழமை 29 ஆம் தேதி, ஆடி 13 ஆம் தேதியான இன்று தேய்பிறை சஷ்டி நாள். முருகப் பெருமானுக்கு உகந்த நாள். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று பழமொழி கூறுவார்கள். முருகப் பெருமானுக்கு உகந்த நாளான இன்று சஷ்டி விரதமிருந்தால் அந்த முருகனே பிள்ளையாய் பிறப்பான் என்பது ஐதீகம்.

வீட்டில் சஷ்டி விரதம்:

முருகப் பெருமானுக்கே உரிய விரதங்கள் சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம் மற்றும் சஷ்டி விரதம். இந்த சஷ்டி விரதம் முருகனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது. இன்று சஷ்டி விரதம் இருக்க முடியாதவர்கள் காலை மற்றும் மாலையில் வீட்டு பூகையறையில் விளக்கேற்றி வைத்து முருகனின் கந்த சஷ்டி கவசம் படித்தால் கவலைகள் நீங்கும்.

சஷ்டி விரதத்தின் பலன்கள்:

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை மற்றும் வளர்பிறை சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று விரதம் இருந்து முருகனை வழிபடுபவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தை வரம் கிட்டும், செல்வ வளம் பெருகும், நினைத்தது நிறைவேறும், பிரச்சனைகள் முடிவுக்கு வரும், கவலைகள் நீங்கும், வேலைவாய்ப்பு தேடி வரும், கடன் தொல்லைகள் நீங்கும்.

கர்ப்பிணி பெண்கள்:

சஷ்டி தினத்தன்று 3 வேளையும் சாப்பிடாமல் இருந்து வீட்டு பூஜையறையில் முருகனை நினைத்து சஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம் படிக்கலாம். ஆனால், வெளியில் இருப்பவர்கள், ஓம் முருகா என்று கூறுவிட்டு பணிகளில் ஈடுபடலாம். கர்ப்பிணிப் பெண்கள் 3 வேளையும் சாப்பிட்ட பிறகே சஷ்டி கவசம் படிக்கலாம்.