சாபங்களை தீர்க்கும் மாவிலை பரிகாரம்!
நாம் வீட்டில் நடக்கும் விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்களத் தோரணங்கள் எனப்படும் மாவிலைத் தோரணம். தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும்.
பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகள் இட்டு, அதன்மீது தேங்காயை வைத்துத்தான் சாமியை ஆவாஹனம் செய்வார்கள். பூஜை முடிந்த பின்னர் மாவிலையால் கலசத்தில் உள்ள புனித நீரை பக்தர்கள் மீது தெளிப்பர். இப்படி விழாக்களில் முதன்மை இடம் பெறுவது மாவிலை.
லக்ஷ்மி தேவி வசிக்கும் மாவிலை:
இந்த மாவிலையில் லட்சுமி தேவி வசிக்கிறாள். விசேஷ நாட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகள் விரைவில் தீர வழிபிறக்கும். மேலும் நம் இல்லத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகி, எதிர்மறை அதிர்வுகளை நீக்கும். நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும் . தலைவாயிலில் இருக்கும் வாக்தேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்.
மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி குறையாது. எனவே அழகுக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல் கூடாது. மாவிலைகளுக்கு இன்னொரு தனிச்சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைகளுக்கு உண்டு என்கிறார்கள். அலங்காரத்துக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை.
சாபங்களை போக்கும் மாவிலை பரிகாரம்:
ஓட்டை மற்றும் பூச்சி அரிக்காத 8 முழு மாஇலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு தேங்காயை உடைத்து, துருவி அந்த தேங்காய் துருவலில் கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து பிசைந்து தேங்காய் சர்க்கரை சேர்த்த கலவையை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் கட்டாயம் உங்கள் வீட்டு குலதெய்வத்தின் படம் இருக்கும். அப்படி இல்லாதவர்கள் தெரியாதவர்கள் அவரவர்க்கு உகந்த சாளக்கிராம கல்லை குலதெய்வமாக வணங்கி வருவார்கள். அந்த குலதெய்வத்தின் முன்பாக மாஇலைகளை அடுக்கி வைத்துவிட வேண்டும். ஒரு மாவிலை பக்கத்தில் இன்னொரு மாவிலையை வைத்து காம்பு பக்கம் இறைவனை பார்த்தவாறும் நுனி பக்கம் உங்களை பார்த்தவாறு இருக்கும்படி வரிசையாக அடுக்கி வைத்து கொள்ளவும்.
அந்த மாவிலைகளின் மேல் தேங்காய் துருவல் சர்க்கரை கலந்த கலவையை ஒரு ஸ்பூன் அளவு வைக்க வேண்டும். இப்படி தேங்காய் சர்க்கரை கலவையை நைவேத்தியமாக மாவிலைகளின் மீது வைத்து, குலதெய்வத்துக்கு படைத்து உங்களுக்கு இருக்கும் சாபம் நிவர்த்தி ஆக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்
இந்த பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் அவரவர் வீட்டிலேயே செய்யலாம். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எப்படிப்பட்ட சாபமாக இருந்தாலும், அதற்கான விமோசனம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இலலை. தேய்பிறை அஷ்டமி திதியன்று இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
தொடர்ந்து 8 தேய்பிறை அஷ்டமி திதிகள் இந்த பரிகாரத்தை செய்து வந்தால், உங்களுக்கு இருக்கக்கூடிய எப்படிப்பட்ட சாபமாக இருந்தாலும் அது கட்டாயம் நிவர்த்தி அடையும் முழுமையாக நிவர்த்தி அடையவில்லை என்றாலும், அந்த சாபத்தின் தாக்கமானது கட்டாயம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.