சிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்?

51

சிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்?

  1. உங்களைப் பார்த்து பயந்து சிங்கம் ஓடுவது போன்று கனவு வந்தால் உங்களது அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
  2. சிங்கம் உங்களை துரத்திக் கொண்டு வருவது போன்று கனவு வந்தால் அரசாங்க வழியில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
  3. சிங்கம் உங்களை கடிப்பது போன்று கனவு வந்தால் எதிரிகளால் பிரச்சனை வரும் என்று அர்த்தம்.

புலி கனவில் வந்தால்:

  1. புலி உங்களை துரத்துவது போன்று கனவு கண்டால் உறவினர்களால் பிரச்சனை வரும்.
  2. புலி மீது அமர்ந்து வருவது போன்று கனவு கண்டால் எதிரிகளை வீழ்த்தி வெற்றி கொள்வீர்கள்.
  3. புலி கனவில் வந்தால் உறவினர்களின் சந்திப்பு நிகழும்.

மற்ற காட்டு விலங்குகள் கனவில் வந்தால்:

  1. காண்டாமிருகம் கனவில் வந்தால் சோர்வு நீங்கி உடல் பலம் பெரும்.
  2. மான் கனவில் வந்தால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள், பிரச்சனைகள் விலகும்.
  3. மானை வேட்டையாடுவது போன்று கனவு வந்தால் பொருள் சேதம் ஏற்படும்.
  4. ஒட்டகம் கனவில் வந்தால் நமது பயணத்தில் பிரச்சனைகள் வரும்.