சிவன் எடுத்த 19 அவதாரங்களின் ரகசியங்கள்!

223

சிவன் எடுத்த 19 அவதாரங்களின் ரகசியங்கள்!

சிவபெருமான் எடுத்த 19 அவதாரங்களைப் பற்றியும், அதன் மகத்துவம் பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம். கடவுள் மனிதராக பிறந்து மனிதர்களை காப்பாற்றியதோடு அல்லாமல் தீமைகளையும் அழிக்கவே சிவபெருமான் 19 அவதாரங்களை எடுத்தார். சிவன் எடுத்த 19 அவதாரங்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.

நந்தி அவதாரம்:

நந்தி என்ற காளை தான் சிவனின் வாகனம். சிவனை நந்தியாக பல இடங்களில் வழிபட்டு வருகின்றனர். நந்திகளின் பாதுகாவலனாக சிவபெருமான் பார்க்கப்படுகிறார்.

பைரவ அவதாரம்:

விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் சண்டை வரும் போது சிவபெருமான் எடுத்த அவதாரம் தான் இந்த பைரவ அவதாரம். அப்போது தான் பிரம்மனின் 5ஆவது தலையை சிவபெருமான் துண்டித்து எடுத்தார்.

பிப்லாட் அவதாரம்:

தாதிச்சி துறவியின் வீட்டில் பிப்லாட்டாக பிறந்தார் சிவபெருமான். ஆனால், சிவபெருமான், பிப்லெட் பிறப்பதற்கு முன்னதாக அந்த துறவிறவி அங்கிருந்து சென்றுவிட்டார். சனி திசையின் இருந்த நிலை சரியில்லாததால் தான் தனது தந்தை துறவி வீட்டை விட்டு வெளியேறினார் என்பதை சிவபெருமான் தெரிந்து கொண்டார். அதனால், சனியை சபித்து, தனது விண்ணக இடத்திலிருந்து சனி கிரகத்தை விழச் செய்தார். அதோடு, 16 வயது வரை யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறி சனியை மன்னித்தருளினார்.

வீரபத்ர அவதாரம்:

தட்சிணா யாகத்தின் போது சதி தேவி தன்னை பலியாக்கி கொண்டதால், சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார். இதையடுத்து, தனது தலையிலிருந்து சிறிது முடியை எடுத்து அதனை தரையில் போட்டார். அப்போது, அதிலிருந்து பிறந்தவர் தான் வீரபத்திரர். எலும்புக் கூடு மாலை அணிந்து, 3 கடுஞ்சின கண்களோடும், பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருக்கும் கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.

அவதூட் அவதாரம்:

இந்திரனின் திமிரை அழிக்கவே சிவபெருமான் எடுத்த அவதாரம் தான் அவதூட் அவதாரம்.

அனுமான் அவதாரம்:

குரங்கு கடவுளான அனுமானும் கூட சிவபெருமானின் ஒரு அவதாரம் தான். விஷ்ணு ராமர் வடிவில் இருந்த போது அவருக்கு பணிபுரிய இந்த அவதாரத்தை எடுத்துள்ளார்.

துர்வாசா அவதாரம்:

அண்ட சராச்சரத்தில் ஒழுக்கம் என்பதை கடைபிடிக்க சிவபெருமான் எடுத்த அவதாரம் துர்வாசா. இவர், முன் கோபாத்திற்கு பெயர் போன துறவி என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ண தர்ஷன் அவதாரம்:

யாகம் மற்றும் சாஸ்தி சடங்குகளின் முக்கியத்துவம் குறித்து உணர்த்தவே சிவபெருமான் எடுத்த அவதாரம் தான் இந்த கிருஷ்ண தர்ஷன் அவதாரம்.

சுரேஷ்வர்:

தன் பக்தர்களை சோதித்து பார்க்க இந்திரன் வடிவில் வந்த அவதாரம் தான் சுரேஷ்வர்.

சுண்டன்டர்கா அவதாரம்:

திருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை ஹிமாலயாவிடம் பார்வதியின் கரத்தை பிடிக்கவே சிவபெருமான் எடுத்த அவதாரம் சுண்டன்டர்கா அவதாரம்.

பிரம்மச்சாரி அவதாரம்:

சிவபெருமானை கணவனாக அடைய நினைத்து பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க சிவபெருமான் எடுத்த அவதாரமே பிரம்மச்சாரி அவதாரம்.

யக்‌சேஷ்வர் அவதாரம்:

கடவுள்களின் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகங்காரத்தை ஒழிக்க சிவபெருமான் எடுத்த அவதாரம் யக்சேஷ்வர் அவதாரம்.

கீரத் (வேட்டைக்காரன்) அவதாரம்:

அர்ஜூனன் தவம் செய்த போது சிவபெருமான் எடுத்த அவதாரம் கீரத் அல்லது வேட்டைக்காரன். அர்ஜூனன் தவம் செய்து கொண்டிருந்ததை அறிந்த துரியோதனன், அர்ஜூனனை கொலை செய்வதற்கு மூக்கா என்ற அரக்கனை அனுப்பி வைத்தார். மூக்கா காட்டுப்பன்றியாக மாறி அர்ஜூனனை கொல்ல வந்தான். அப்போது, சத்தம் கேட்டு கண் விழித்த அர்ஜூனன் அவருடன் கீரத் இருவரும் சேர்ந்து காட்டுப்பன்றியை அம்புகளை எய்து கொன்றனர். இதில், யார் காட்டுப்பன்றிய கொன்றது என்பதில் கீரத் மற்றும் அர்ஜூனன் இருவருக்கும் இடையில் கடும் சண்டை வந்தது. கீரத் வடிவெடுத்திருந்த சிவபெருமானை சண்டைக்கு வரச்சொல்லி சவால் விடுத்தான் அர்ஜூனன். சண்டையில் அர்ஜூனனின் வீரத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அர்ஜூனனுக்கு தனது பஷூபதா என்ற ஆயுதத்தை பரிசாக அளித்தார்.

பிஷூவர்யா அவதாரம்:

அனைத்து ஆபத்துகளிலிருந்தும் மனிதனை காப்பாற்றவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.

யாதிநாத் அவதாரம்:

ஒரு காலத்தில் ஆஹூக் என்ற பழங்குடியைச் சேர்ந்த ஒருவன் தனது மனைவியுடன் வாழந்து வந்தான். இருவருமே சிவனின் தீவிர பக்தர்கள். ஒருநாள் யாதிநாத் வடிவில் வந்த சிவபெருமான், அவர்களை சந்தித்தார். ஆனால், ஆஹூக் வீட்டில் அவர்கள் மட்டுமே தங்கக் கூடிய அளவிற்கு தான் குடிசை இருந்ததால், விருந்தாளியான யாதிநாத்தை வெளியே தங்க வைத்தார்கள்.

ஆனால், எதிர்பாராதவிதமாக அன்று இரவு வனவிலங்குகளால் ஆஹூக் கொல்லப்பட்டான். தனது கணவன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனைவியும் இறக்க நினைத்தால். அப்போது யாதிநாத் வடிவில் வந்த சிவபெருமான் தனது உண்மையான ரூபத்தைக் காட்டி ஆஹூக்கின் மனைவிக்கு ஒரு வரமளித்தார். அதன்படி, அவளும், அஹூக்கும் நளன் மற்றும் தமயந்தியாக பிறப்பார்கள். அவர்கள் இருவரையும் சிவபெருமானே சேர்த்து வைப்பார்.

ரிஷப அவதாரம்:

பாற்கடல் கடைதல் நிகழ்ச்சிக்குப் பிறகு விஷ்ணு பகவான் கீழோகத்திற்கு சென்றார். கீழோகத்தில் உள்ள ஒரு பெண்ணின் அழகில் மயங்கினார். அங்கே தங்கியிருந்த போது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால், பிறந்த அனைவருமே அசுரத்தனத்துடன் கொடியவர்களாக இருந்தனர்.

அவர்கள் அனைவரும் மனிதர்களுக்கும், கடவுள்களுக்கும் தொல்லைகள் கொடுத்து வந்தனர். சிவபெருமான் காளை அல்லது ரிஷப வடிவமெடுத்து விஷ்ணு பகவானின் அனைத்து மகன்களையும் கொன்றார்.

தனது மகன்களை கொன்ற காளையை கொல்ல விஷ்ணு பகவான் வந்த போது காளை அவதாரத்திலிருந்து மாறிய சிவபெருமான், தனது வடிவத்தைக் காட்டியதைத் தொடர்ந்து, விஷ்ணு பகவான் அவரது இடத்திற்கே திரும்ப சென்றுவிட்டார்.

ஷரபா அவதாரம்:

சிவபெருமான் பாதி பறவை, பாதி சிங்கம் என்று இருந்த அவதாரம் தான் ஷரபா அவதாரம். ஆனால், சிவ புராணத்தின் படி, விஷ்ணுவின் பாதி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்க அவர் எடுத்த அவதாரம் தான் ஷரபா அவதாரம்.

அஸ்வத்ஹமா:

பாற்கடலை கடைந்த போது சிவபெருமான் கொடிய நஞ்சை உட்கொண்டார். அந்த நேரத்தில் நஞ்சு அவரது தொண்டையில் எரியத் தொடங்கியது. இதையடுத்து, சிவபெருமானின் உள்ளிருந்த விஷ் புருஷ் வெளிவந்தது. அதற்கு கடவுள் ஒரேயொரு வரம் கொடுத்தார். அதாவது, பூமியில் துரோணரின் மகனாக பிறந்து, சத்ரியர்கள் அனைவரையும் எதிர்த்து நின்று கொள்வான் விஷ் புருஷ். அதனால், விஷ் புருஷ் அஷ்வத்ஹமாவாக பிறந்தான்.

க்ரஹபதி அவதாரம்:

விஸ்வனார் என்ற பிராமணரின் வீட்டில் அவரது மகனாக சிவபெருமான் பிறந்தார். அவருக்கு க்ரஹபதி என்று விஸ்வனார் பெயரிட்டார். க்ரஹபதிக்கு 9 வயதாகும் போது அவர் இறந்துவிடுவார் என்று நாரதர், விஸ்வனாரிடம் தெரிவித்தார். அதனால், தனது மரணத்திலிருந்து தப்பிக்க க்ரஹபதி காசிக்கு சென்றான். அங்கே சிவபெருமானிடம் ஆசி பெற்றதால், தனது மரணத்தை ஜெயித்தான் க்ரஹபதி என்பது குறிப்பிடத்தக்கது.