சிவன் காதில் அணிந்திருக்கும் 7 வகையான காதணிகள்!

35

சிவன் காதில் அணிந்திருக்கும் 7 வகையான காதணிகள்!

ஆடை ஆபரணங்கள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. பொதுவாக உலகில் மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் காசு, பணத்தோடு ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். இவ்வளவு ஏன், இறைவன்களுக்கு கூட ஆடை, ஆபரணங்கள் அதிகளவில் இருக்கும். பூஜை நேரங்களில் சாமிகளுக்கு அணிந்து அர்ச்சனை, ஆராதனை செய்யப்படும்.

ஆனால், ஆடம்பர அணிகலன்களையோ அல்லது வஸ்திரங்களையோ, பட்டாடைகளையோ, பொன் நகைகளையோ விரும்பாத இறைவன் சிவபெருமான். எப்போதும், புலித்தோடும், உடல் முழுவதும் விபூதி பூசிக் கொண்டு, தலையில் ஜடாமுடி தரித்து, கால்களில் சிலம்புகளுடன்ம் கைகளில் சூலத்தோடு தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

சிவபெருமான், தனது உடலில் நிறைய அணிகலன்களை அணிந்திருப்பதாக அப்பரர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் தேவாரப் பாடல்களில் எடுத்துரைத்துள்ளனர். அதில், சிவபெருமான் காதில் மட்டும் 7 வகையான காதணிகள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

அது என்னென்ன தெரியுமா?

  1. குழை
  2. குண்டலம்
  3. சுருள்
  4. கோளரவம்
  5. பொற்றோடு
  6. தோடு
  7. ஓலை