சிவபெருமான் என்றால் ஏன் பயம் ஏற்படுகிறது?
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் மும்மூர்த்திகள். இதில், பிரம்மா படைத்தல், விஷ்ணு காத்தல் மற்றும் சிவன் அழித்தல் பணியை செய்கின்றனர். சிவன் கோயிலுக்கு சென்றால் எதுவுமே இல்லாமல் ஆண்டியாகிவிடுவோம் என்று சிலர் பயப்படுவது உண்டு. சிவத்திருமேனி வீட்டில் வைத்தால் குடும்பமே ஆடிவிடும் என்று சொல்வார்கள்.
ஒற்றைக்காலில் நிக்கிற சாமி, சுடுகாட்டு சாமி இன்பத்தையே தராது பணமே சேராது என பயப்படுகிறார்கள். ஒருவர் சிவனடியாராக வேண்டுமென்றால் கட்டுப்பாடு சுத்தம் பத்தம், மது மாது இதையெல்லாம் சமாளிப்பது சாத்தியமா என்று பயப்படுகிறார். சிவன் சோதனைகளை கொடுக்கும் அறிவியல் ஆசிரியராக பார்க்கப்படுகிறார்.
சிவன் கோயிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்தோ சிவனை வழிபட்டு
தென்னாடுடைய சிவனைப் போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
என்று கோஷமிட்டு
ஈசனே (பிரதோஷம், சிவராத்திரி) இப்படிப்பட்ட ஒரு நல்ல நாளில் உன்னை வணங்குகிறேன். என்னை எப்படியாவது காப்பாற்று
அடுத்தநாள் ஆத்தா தாயி என்ன பெத்தவளே, உன் பிள்ளைய நீதாமா காப்பாத்தனும், கஷ்டத்துல இருக்கிறேன் என்று நிபந்தனை அன்று மாலையே அப்பனே பிள்ளையாரப்பா, சங்கட சதுர்த்தி நாளில் உன்னை பார்க்க வந்திருக்கிறேன்
நீதான் பா சன் சங்கடத்த தீர்க்கணும்
விநாயகரைத் தொடர்ந்து முருகப் பெருமான் கோயிலுக்கு சென்று
முருகா முருகா முருகா….அப்பனுக்கு உபதேசம் செய்த முருகப் பெருமானே உனக்கு காவடித்தூக்குறேன் நீதான்பா காப்பாத்தணும்…
அடுத்து சாமே சரணம் ஐயப்பா இந்த ஒரு மண்டலம் முழுவதும் நீதான் எனக்கு முழு முதல் கடவுள்… இந்த வருடம் முழுவதும் நீதான் காப்பாத்தனும்…
இதையடுத்து, திருப்பதி ஏழுவெங்கடாஜலபதி….திருப்பதி சென்று மொட்டை போட்டு வந்தா திருப்பம் வரும் என்று குடும்பத்தோட போய்விட்டு வருவோம்…
இப்படியே அடுக்கிக்கிடே போனா எப்போ தான் எந்த சாமி தான் அருள் புரியுது? இதுதான் வழிபாட்டு முறையா? இப்படிப்பட்ட வழிபாட்டு முறையால் பக்தர்களுக்கு மனநிறைவோ, சந்தோஷமோ அமைதியோ இருக்கா? என்றால் இல்லை என்று சொல்லலாம். வழிபாட்டு முறையில் அமைதியும், தெளிவும் நம்பகத்தன்மையும் இல்லாததே காரணம்.
தெய்வம் என்று நீங்கள் எந்த ஒன்றை உண்மையாக மெய்யாக நம்புகிறீர்களோ அந்த தெய்வம் எந்தப்பெயரில், எந்த உருவத்தில் இருந்தாலும் அதுதான் சிவம் இதைத்தான்
“யாதொரு தெய்வமாகினும்
மாதொருபாகத்தனாய் அருள்வதாகப் பொருள்.
தவிர பார்ப்பதையெல்லாம் நம்புகிறோம் என்ற மாயையில்,
எதிலும் நம்பகத்தன்மையில்லாது இருப்பது பக்தியல்ல.
சிவபெருமான் அன்பே வடிவானவர் கருணையே உருவானவர் என்பது அவரை முழுமுதற் கடவுளாக உணர்ந்தவரால் மட்டுமே உணர முடியும்.
அவர் கேட்பதை கொடுக்கிற சாமியா என கேட்க வேணாம்
நமக்கு உகந்தது என்றால் நாம் கேட்காவிடினும் கொடுக்கும் தயாபரன் சிவம்.
ஒருமுறை முழுதா நம்பினோர்க்கு தன்னை முழுதாக காண்பிக்கும் கூத்தப் பெருமான் சிவம். தன் பிரச்சனை தீர்ப்பாரா என கேட்க வேணாம். எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு தீர்வு தரும் நீதிமான் சிவன். இன்பம் தருவாரா என்று கேட்க வேணாம்…
சிவனை வழிபட்டவர்கள் கெட்டதாக சரித்தரமே கிடையாது.
சிவாய நம ஓம் அபாயம் யாவும் போம்
அபாயம் யாவும் போம் உபாயம் அறிவோம்
சிவ சிவ என்போம் சிவகதி பெறுவோம்
ஹர ஹர என்போம் அவன் தாள் பணிவோம்
சிவ ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்…