சிவபெருமான் காலடி வைத்த பர்வதமலையின் சிறப்புகள்!

64

சிவபெருமான் காலடி வைத்த பர்வதமலையின் சிறப்புகள்!

பர்வதமலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும்.

இந்த மலையில் தான் ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தமிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்று சொல்லப்படுகிறது.

இந்த மலையில் மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவில் காணப்படுகின்றது. மலைக்கு செல்ல 200 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படிகள் இருக்கும். பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்யலாம்.

அமாவாசை அன்று மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரைகருப்பு உப்பு போல் படர்ந்து இருக்கும். ஆனால் இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான் சிறப்பு.

சித்தர்கள் வாழும் பர்வதமலை:

இந்த மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுக்கிறார் என்று சொல்லப்படுகிறது. வட மாநிலங்களில் செய்வது போலவே, இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் என்று கூட சொல்லலாம்.

பர்வதமலையின் தரிசனச் சிறப்பு:

இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது தலபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கும். இந்த பர்வத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். இமயத்திலிருந்து சஞ்சீவி மலையை தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி மலை தான் இந்த பருவதமலை என்று கூறப்படுகிறது.

தீராத நோய்கள் தீரும்:

3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை.

அம்மன் கன்னத்தில் ஒளி:

இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம் அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகுடன் காட்சியளிக்கும்.

இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம் அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் காணப்படும்.

ராட்சத திரிசூலம்:

மலை உச்சியில் ராட்சத திரிசூலம் காணப்படும் தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் போல் காட்சியளிக்கும். சித்தர்கள் கழுகு திருக்கழுக்குன்றம் போல் இங்கும் 3 கழுகுகள் இந்த மலையை சுற்றி வருவதைக் காணலாம். இங்கு பவுர்ணமி பூஜை சிறப்பாக நடக்கும். இங்குள்ள சிவனை தரிசித்தால் ஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை.