சுக்கிர யோகம் கிடைக்க வெள்ளி பிரதோஷ வழிபாடு!

19

சுக்கிர யோகம் கிடைக்க வெள்ளி பிரதோஷ வழிபாடு!

வெள்ளிக்கிழமை பிரதோஷ நன்னாளில் பிரதோஷ பூஜையை தரிசித்தால் சுக்கிர யோகம் கிடைக்கும் என்பது ஐதீகம். அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவனே சரணாகதி சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு சிவனாரையும் நந்திதேவரையும் வணங்கி அருகம்புல் மாலை சாற்றுவது சிறப்பு.

சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகள் ஏராளம். மாதந்தோறும் வருகிற சிவராத்திரி சிவ வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான நாள். இந்த நாளில் விரதம் மேற்கொண்டு சிவ தரிசனம் செய்வது வழக்கம். திதிகளில் சிவனாருக்கு உரிய திதியாக திரயோதசி திதி போற்றி வணங்கப்படுகிறது.

திரயோதசி திதி என்பது அமாவாசைக்கு முந்தைய மூன்றாவது நாளிலும் பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாவது நாளிலும் வரும். இந்த திரயோதசி திதியில் பிரதோஷ பூஜை நடைபெறும். பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில் அனைத்துச் சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அப்போது நந்திதேவருக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெறும். சிவலிங்கத் திருமேனிக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பெருமாள் அலங்காரப் பிரியன், சிவபெருமான் அபிஷேகப் பிரியன். ஆகவே, லிங்கமே வடிவெனக் கொண்டு காட்சி தரும் சிவனாருக்கு அபிஷேகங்கள் குளிரக்குளிர செய்வது நல்லது.

நமசிவாய வாழ்க சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்… அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் சரணம்…அப்பனே ஈசனே வேண்டிய வரம் அருளும் வேங்கீஸ்வர பெருமானே உன்னை போற்றி தொழுகிறோம்…

உன் திருவடிகள் சரணம்….