சுவாமி ஐயப்பன் என்னென்ன நிலையில் இருப்பார் தெரியுமா?
- ஆரியங்காவில் மணந்த நிலையில் இளவயதாக துறந்த யோகத்தில் பகவான் இருக்கிறான்.
- அச்சங்கோயிலில் வயோதிக நிலையில் காட்டரசனாக கொலுவிருக்கிறான்.
- குழத்துபுழை சேத்திரத்தில் குழந்தை ரூபத்தில் காட்சி தருகிறான்.
- பந்தளத்தில் யுவராஜனாக குடும்ப நிலையில் பகவான் உள்ளான்.
- சபரிமலை பூங்காவனத்தில் நித்திய பிரம்மச்சாரியாக தவமிருக்கிறான்.
- பொன்னம்பல மேட்டில் இயற்கையோடு சூட்சுமமாக வடிவமின்றி சுற்றுகிறான்.
- எருமேலியில் வேட்டையாடும் குல வேடத்தில் வேட்டைகாரனாய் இருக்கிறான்.
- சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆதி கிழவனாக அத்தனை சாஸ்தா ரூபங்களுக்கும் மூல ரூபமாக பாண்டி மலையாளத்தை ஆண்டு கொண்டிருக்கிறான்.
- இதில் சபரிமலை ஐய்யன் தொடங்கி அத்தனை தெய்வங்களும் வருடத்தின் ஒருமுறையாவது பூரண புஷ்கலா ரூபமாய் கிரகஸ்தனாய் காட்சி தந்துவிடுகிறான்.
சுவாமியே சரணம் ஐயப்பா