தங்க நகை அணிவதால் ஏற்படும் நன்மைகள்!

123

தங்க நகை அணிவதால் ஏற்படும் நன்மைகள்!

பொதுவாக ஆடை வாங்குவதிலும் சரி, தங்க நகை வாங்குவதிலும் சரி அளவுக்கு அதிகமாக ஆசை கொண்டிருப்பவர்கள் பெண்கள். என்னதான் பணவரவுக்கு ஆண்கள் காரணமாக இருந்தாலும், அதனை செலவழிக்கும் வழி என்னவோ பெண்களுக்கு தான் நன்றாகவே தெரிந்திருக்கிறது. சவரன் எத்தனை ஆயிரம் விற்றாலும், பரவாயில்லை பிடித்திருந்தால் போதும் என்று மாதத்திற்கு ஒரு நகை என்று நினைத்த போதெல்லாம் நகை வாங்கி குவித்துவிடுவார்கள்.

தங்க நகை அணிந்து கொள்வது அழகுக்காக தான் என்றாலும் அதில் ஆரோக்கியமும் தொடர்பு கொண்டுள்ளது. எப்படி என்றால், பழங்காலத்தில் நமது முன்னோர்கள் தங்கம், வெள்ளி நகைகளை அணியவும், தாமிரம், பித்தளை பாத்திரங்களை உணவு சமைக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.

எகிப்து, சுமேரியா நாகரீகங்களின் காலகட்டத்தில் வெள்ளி, தாமிரம், தங்கத்தின் பயன்பாடு அதிகளவில் இருந்துள்ளது. இதனால், நம் வீடுகளில் பாட்டிமார்கள் தங்களது காதுகளில் தங்க தந்தட்டி, மூக்கின் இரு பக்கங்களிலும் மூக்குத்தி அணிந்து கொள்வதையும், தாமிரப் பானைகளில் தண்ணீர் குடித்து உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருந்தனர். இதன் காரணமாக தங்க நகை அணிவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்….

உடல் உறுப்புகளை தொடும் தங்க நகைகள்:

காது, மூக்கு, கழுத்து, கை ஆகிய பகுதிகளில் அணியும் தங்க நகைகள் நமது உடலில் உள்ள வர்ம புள்ளிகளைத் தூண்டி உடலில் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது என்று பக்குபஞ்சர் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடலில் அழகு மிளிரும்:

காது, மூக்கு, கைகளில் தங்கம் அணிந்து கொண்டால், நம் உடலில் தேஜஸ் அதிகரித்து அழகு கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெள்ளிக் கொலுசு:

கால்களில் அணிந்து கொள்ளும் வெள்ளிக் கொலுசானது பெண்களின் கால் நோய்களை குணப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி பெண்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனையான மாதவிலக்கு காலங்களில் அவர்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாவதிலிருந்து பாதுகாக்கிறது என்றும் கூறப்படுகிறது.

மாமன் மடியில் அமர்ந்து காது குத்துதல்:

கால், கை, உள்ளங்கை, உள்ளங்காலில் உள்ள வர்மபுள்ளிகளை தூண்டும் விதமாக வெறும் காலால் மலைகோயில்களுக்கு செல்வது, தாய் மாமன் மடியில் அமர்ந்து குழந்தைக்கு மொட்டை போட்டு காது குத்தி தோடு அணிவிப்பது என்பது நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒரு திருவிழா. இந்த நிகழ்ச்சியின் போது உறவினர்கள், ஊர்க்காரர்கள் என்று அனைவரும் ஒன்று திரண்டு மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.

நகை அணிதல் அவசியம்:

தங்கமோ, வெள்ளியோ என்று எந்த  நகையாக இருந்தாலும் அது நமது உடலில் வர்மபுள்ளிகளை தூண்டி விடுகிறது. இதன் காரணமாக இனிமேலாவது ஏதோ ஒரு நகையை அணிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் பல வியாதிகள் கட்டுப்படுத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.