தர்மந்தானே முக்கியமானது?

299

எமதர்ம ராஜாவை பின்தொடர்ந்து செல்கிறாள் சாவித்திரி….எவ்வித கலக்கமுமில்லாமல்,, நிதானமாக தர்மராஜாவிடம் பேச்சுக்கொடுத்தாள்..

சத்துக்கு தர்மந்தானே முக்கியமானது !!
தர்மந்தானே ஒருபக்தனுக்கு முக்கியம்!!
தர்மம் தானே காக்கும்?⚛⚛என்று கேட்க,,
தர்ம ராஜாவுக்கு ஒரே ஆனந்தம்.. நம்மை எல்லோருமே தூற்றுகிறார்கள், 
வசைபாடுகிறார்கள்…ஆனால் இவளோ! தர்மத்தை பற்றி பேசகிறாளே !! ,என்று நினைத்து மகிழ்ந்தார்…

”பென்னே !! சரியாக சொன்னாய், தர்மம் தான் பெரியது…நான் மகிழ்ந்தேன்..உனக்கு ஓர் வரம் தருகிறேன்” கேள்,… என்றார்..என் மாமனார் கண் தெரியாமல் இருக்கிறார்,, நீர் சூரிய புத்திரராயிற்றே !!… கொஞ்சம் நீர் பார்த்தால் என் மாமானார் கண்களை பெறுவார் என்றாள்… பெண்ணே! , இதோ கொடுத்தோம் !! ➡ என்று சொல்ல, த்யுமத்சேனனு க்கு கண்கள் கிடைத்தன…1.

மேலே போனார்கள்..;திரும்பி போ என்றார்…. இருக்கட்டும்,, சத்துக்கு தர்மந்தான் பெரிது ?,, அந்த சத்துக்கள்- சாதுக்களோடு சேர்ந்து, ஸங்கமமாகி
சத்ஸங்கத்தோடு இருந்தால்தானே ஆனந்தம் ?? என்றாள்….””உண்மைதான் தேவி!!, சத்துக்கள் ஸங்கமமாகி, பகவான் நாமங்களை பாடுவதுதான் உயர்ந்த தர்மம், அது நம்மை காக்கும்” ;🔯🔯 என்று கூறிவிட்டு, உன்னால் நான் மகிழ்ந்தேன்…இன்னொரு வரம் கேள். என்றார் தர்மராஜா…ராஜ்ஜியத்தை இழந்து– கஷ்டப்படும் என் மாமானாருக்கு– மீண்டும் ராஜ்ஜியம் கிடைக்க வேண்டும் என்றாள்…..2.

தேவி!! இதோ தந்தோம்;➡➡ என்றார்….சரி கிளம்பு; என்றார்… இருக்கட்டும்,, கொஞ்ச தூரம்; ,,என்று நடந்தனர்…அப்ப, அவ்வாறு,, அந்த சாதுக்களோடு சேர,, சேர,, நமக்கு தீய எண்ணங்கள் அகலும்,, பொறாமை குணம், பிறரை துவேஷிக்கும் எண்ணம்,, தீய நடத்தைகள் போன்றவை வராதல்லவா ;🔯🔯 , என்று கேட்டாள்…..”மிக சரியாக சொன்னாய் பெண்ணே !!இன்னொரு வரம் கேள் தருகிறேன் ” என்றார். தரமராஜா….3.

என் தந்தைக்கு வாரிசு இல்லை, வாரிசு வேண்டும் என்றாள்..
ஆச்சர்யபட்டார் எமதர்மராஜா,,, இவள் தனக்கென்று எதுவும் கேட்டுக்கொள்ளவில்லையே !! என்று, மகிழ்ச்சி அடைந்து, இதோ தந்தேன் என்றார்…➡➡➡.மேலும் நடந்தனர்…

நம்பிக்கை எதனால் வருகிறது ??, இவர் நமக்கு ஏதாவது செய்வார் !! என்று ஒருவரிடம் நம்பி சென்றால்தானே வருகிறது.??..பிரம்மம் இருக்கிறது என்று நம்பித்தானே கடவுளை அண்டி நிற்கின்றோம்.🔔🔔🔔🔔..அவ்வாறு தானே பகவான்—-கோயில் களெங்கும் அர்ச்சாரூபமாக இருக்கிறார்..நம்பிக்கை தானே அனைத்திற்கும் ஆதாரம்..என்றாள்..

நல்லா சொன்னாய், பெண்ணே!! சரி, இன்னொரு வரம் கேள்,, என்று கூறினார்…..

எனக்கும் -என்கணவன் சத்தியவானுக்கும்,, சத்தியத்தை நிலைநாட்டும், சத்தியத்தை எங்கும் பறைசாற்றும் 100 குழந்தைகள் வேண்டும்– என்றாள்…..

இதோ தந்தேன் !!, என்று நான்காவது வரத்தையும் தந்தார் தர்மராஜா….➡➡➡➡.

சரி, கிளம்பு பெண்ணே ! என்றார்…எங்கே கிளம்புறது,, எனக்கு குழந்தைகள் வேண்டும்,, அதற்கு என் கணவன் வேண்டும் என்று சொன்ன சாவித்திரி, உடனே எமதர்மரின் காலில் விழுந்து நமஸ்கரித்தாள்.✔✔✔✔🔯🔯🔯

அப்பத்தான் தர்மராஜாவுக்கு புரிந்தது..
எவ்வளவு சாதுர்யமாக இவள் நடந்து கொண்டாள்??. என்று ஆனந்தப்பட்டார்..

தேவி !!, இப்படி வரத்தை கொடுத்துவிட்டோமே??, என்று யாம் நிணைக்கவில்லை…தவறு செய்து விட்டோம் என்று நினைக்கவில்லை..தகுதியான ஒருவருக்கு வரம் கொடுத்தோம் என்று மகிழ்வடைகிறோம்…பகவான் அதற்குத்தானே என்னை வைத்துள்ளார் !!..

சொன்னது சொன்னதுதான்…✌✌
இதோ உன் கணவனை அழைத்துச்செல்லும் ;🌷🌷🌷🌷🌷 என்று சொல்லி விட்டு, எமதர்ம ராஜா புறப்பட்டு போனார்…

கணவனோடு திரும்பி வந்த சாவித்திரி யை வழியில் ரிஷிகளெல்லாம் கொண்டாடினர்…நடந்ததை கூறினாள் சாவித்திரி….
என்று தர்மபுத்திரருக்கு, அவர்கள் வனத்தில் துன்பப்பட்டபோது இந்த சரித்திரத்தை கூறினார் மார்க்கண்டேயர் ரிஷி.