திருநீறில் அறிவியல் உண்மையா? அது எப்படி?

402

திருநீறில் அறிவியல் உண்மையா? அது எப்படி?

பொதுவாக அனைவருமே கஷ்டங்கள், துன்பங்கள், பிரச்சனை வந்தால் தான் கோயிலுக்கு சென்று இறைவனிடம் முறையிடுவார்கள். அப்போது எனக்கு இதை கொடு, இது வேண்டும், அது வேண்டும், இந்த பிரச்சனை தீர வேண்டும் என்று முறையிடுவார்கள். ஆனால், உண்மையில், மனதார கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்பவர்கள் சில பேர் மட்டுமே. மேலும், அவர்கள் தான் முறைப்படி இறைவனை தரிசித்து வருகிறார்கள். அதோடு, கோயில்களில் பிரசாதமாக கொடுக்கப்படும் திருநீறு, குங்குமம் முதலானவற்றை முறைப்படி நெற்றியிலிட்டுக் கொள்கிறார்கள். சும்மா, எடுத்தோம், வாங்கினோம் என்று திருநீறு, குங்குமத்தை யாரும் நெற்றியிலிடக் கூடாது.

திருநீறு, குங்குமத்தை நெற்றியிலிட்டுக் கொள்வதற்கும் வரைமுறை உண்டு. அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். சிலரது நெற்றியில் திருநீறு, குங்குமம் என்று இருந்து கொண்டே இருக்கும். அப்படி திருநீறு அணிந்து கொள்வதால், தீவினை நம்மை தாக்காமல் காக்கும் கவசமாகவும், செல்வத்தை வாரி வழங்கும் என்று நம்பப்படுகிறது.

திருநீர்

எத்தகையவராக இருந்தாலும், இறப்புக்குப் பின் தீயில் எரிந்து சாம்பலாக ஆகிவிடுவர் என்னும் தத்துவத்தை உணர்த்தியதோடு, நாமும் இது போன்று தான், ஆகையால், இறை சிந்தனையோடு நீதி, நெறி தவறாமல் ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது. முழு முதல் கடவுளான சிவ பெருமானை இந்த திருநீர் குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர்.

ஞானம் என்ற தீயில் அனைத்துமே சுட்டு எரிந்த பின் இருப்பது பரிசுத்தமான சிவனின் தத்துவமே என்பதை இந்த திருநீர் (விபூதி) குறிக்கின்றது.

திருநீரின் பெருமைகளும், நன்மைகளும்:

 1. ஞானத்தை உண்டாக்கும்.
 2. புத்திக் கூர்மையைத் தரும்.
 3. ஞாபக் சக்தியை அதிகரிக்கும்
 4. உடல் துர்நாற்றத்தைப் போக்கும்.
 5. தீட்டு கழிக்கும்.
 6. உடலைச் சுத்தம் செய்யும்.
 7. வியாதிகளை குணப்படுத்தும்.
 8. முகத்திற்கு அழகைத் தரும்.
 9. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.
 10. பில்லி, சூனியம் போக்கும்.
 11. பாவத்தைப் போக்கும்.
 12. பக்தியைத் தரும்.

இரவு நேரங்களில் தூங்கும் போது நமது படுக்கையில், ஆயிரக்கணக்கான அணுக்கள் பரவியிருக்கும் என்று அறிவியல் கூறுகிறது. அதே போன்று தான் மாலை நேரங்களிலும் சுற்றுச்சூழலில் எண்ணற்ற நோய்த் தொற்று கிருமிகள் உலாவுகின்றன என்று அறிவியல் கண்டுபிடிப்பு. அதனால், தான் காலையும், மாலையும் நோயணுக்களின் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவும், ஈரமில்லாத திருநீறை அணிந்து வருகின்றனர்.

குளிக்கும் போது நமது மூட்டுகளில் நீர் கட்டு உருவாவதற்கு வாய்ப்பிருக்கிறது. காலப் போக்கில் அந்த நீர் கட்டானது கொழுப்பாக மாறி மூட்டு வாதமாக மாறும் சூழல் இருக்கிறது. இதனை தவிப்பதற்காகவே குளித்த உடன் ஈரமான திருநீறை அணிவது வழக்கமாக்கப்பட்டது.

அறிவியல் காரணம்:

நமது உடலில் நெற்றி என்பது மிக முக்கியமான பாகம். அது வழியாக சக்தி வெளிப்படவும் செய்யும், உள்ளிழுக்கவும் செய்யும். சூரியனிடமிருந்து வெளிப்படும் கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கட த்தும் வேலையை திருநீறு செய்கிறது. அதன் காரணமாகத்தான் திருநீறு பூசிக் கொள்கிறார்கள்.

திருநீறு பூசிக் கொள்ளும் முறை

வடக்கு திசை அல்லது கிழக்கு பக்கமாக நின்று கொண்டு வலது கையின் ஆள் காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரலால் திருநீறை எடுத்து மேலே பார்த்தவாறு கீழே சிந்தாமல் பூசிக் கொள்ள வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும், பூசிக் கொள்ளும் போது சிவசிவ அல்லது சிவாய நம என்று சொல்ல வேண்டும்.

மேலும், திருநீறை நெற்றி முழுவதும் பூசிக் கொள்ள வேண்டும் அல்லது ஆள் காட்டி விரல், நடு விரல் மற்றும் மோதிர விரல் என்று 3 விரல்களும் படும்படியாக பட்டையாக திருநீறு பூசிக் கொள்ள வேண்டும்.