திருநீறைப்பற்றி திருஞானசம்பந்தர் என்ன சொல்கிறார்?

143

திருநீறைப்பற்றி திருஞானசம்பந்தர் என்ன சொல்கிறார்?

சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயிலில் (மதுரை) எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, தமிழ் மந்திரம் போல நினைத்ததைக் கொடுப்பது; நினைப்பவரைக் காப்பது.

 1. சிவலோகத்தில் உள்ள வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது.
 2. அழகு தருவது.
 3. எல்லா நூல்களாலும் புகழப்படுவது.
 4. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது.
 5. சிவமயத்தில் நிலைத்துள்ளது.
 6. குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது.
 7. கொடிய துயர்களைப் போக்குவது.
 8. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது.
 9. புகழ்ந்து போற்றத் தக்கது.
 10. உண்மையாக நிலைபெற்றிருப்பது.
 11. திருஆலவாயான் திருநீறு வீடுபேறு அளிப்பது.
 12. முனிவர்களால் அணியப் பெறுவது.
 13. நிலையாக எப்போதும் உள்ளது.
 14. சிவனடியார்களால் புகழப்படுவது.
 15. இறைவனிடம் பக்தியை விளைப்பது.
 16. வாழ்த்த இனியது.
 17. எண்வகைச் சித்திகளையும் தரவல்லது.
 18. திருஆலவாயான் திருநீறு தன்னை அணிந்தோரைப் பிறர் கண்ணுக்கு அழகராயளித்துக் கருத்திற்கு இனிமை விளைப்பது.
 19. அழகைக் கொடுப்பது.
 20. விரும்பி அணிவார்க்குப் பெருமை கொடுப்பது.
 21. இறப்பைத் தடுப்பது.
 22. அறிவைத் தருவது.
 23. உயர்வு அளிப்பது.
 24. திருஆலவாயான் திருநீறு, பூசுதற்கு இனிமையானது.
 25. புண்ணியத்தை வளர்ப்பது.
 26. பேசுதற்கு இனியது.
 27. பெருந்தவம் செய்யும் முனிவர்கட்கு ஆசையை அறுப்பது.
 28. முடிவான பேரின்பநிலையை அளிப்பது.
 29. உலகோரால் புகழப்படுவது.
 30. அழகிய மாளிகைகள் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறு செல்வமாக இருப்பது.
 31. துன்பம் போக்குவது.
 32. மனவருத்தத்தைத் தணிப்பது.
 33. துறக்க இன்பத்தை அளிப்பது.
 34. சிறப்பாகச் சைவ சமயத்தார்க்கும் பொதுவாக எல்லாச் சமயத்தார்க்கும் பொருத்தமாயிருப்பது.
 35. புண்ணியரால் பூசப்பெறுவது.
 36. கூர்மைக்கு விளக்கம் தருகின்ற சூலப்படையினை ஏந்திய திருஆலவாயான் திருநீறு, திரிபுரங்களை எரிக்கச் செய்தது.
 37. இம்மை மறுமை இன்பம் தர இருப்பது.
 38. பிறரோடு பழகும் பயன் அளிப்பது.
 39. செல்வமாக விளங்குவது.
 40. உறக்கநிலையைத் தடுப்பது.
 41. தூய்மையை அளிப்பது.