திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

324

திருமணமான பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?

திருமணமான பெண்கள் தங்களது காலில் மெட்டி அணிவது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல. பாரம்பரியம், பண்பாடும் கூட. எப்படி மூக்குத்தி, காது குத்துவது வழக்கமோ அதே போன்று தான் திருமண நிகழ்ச்சியின் போது மணப்பெண்ணுக்கு, காலில் மெட்டி அணியும் நிகழ்வு நடக்கும். இது மணமகனோ அல்லது மணமகனின் சகோதரியோ அணிந்துவிடுவார்கள்.

இது, திருமணமானதற்கு அடையாளம் மட்டுமல்லாமல், இதில், அறிவியலும் மறைந்திருக்கிறது. பெண்கள், தங்களது இரு கால்களிலும் மெட்டி அணிந்து கொள்வதால், அவர்களது மாதவிடாய் சுழற்சி முறையில் சீரான முறையில் செயல்படுகிறது என்று கூறப்படுகிறது.

அதோடு, கருவுறுதலில் நல்ல நோக்கத்தையும் கொடுக்கிறது. மேலும், கால் பெருவிரலுக்கு அடுத்த நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது. ஆதலால், அந்த விரலில் மெட்டி அணிவதால், கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், அதற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.

வெள்ளி ஒரு நல்ல கட த்தி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அது, பூமியிலிருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, கால் நடுவிரலின் நரம்பு வழியாக புத்துணர்ச்சியை பரவச் செய்கிறது. இதனால், தான் பெண்கள் காலில் மெட்டி அணிவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மெட்டியானது கடைசி வரையில் அவர்களது காலில் அணிந்திருக்கப்படும்.