திருவிழாவில் தேர் இழுப்பது எதற்கு தெரியுமா?

145

திருவிழாவில் தேர் இழுப்பது எதற்கு தெரியுமா?

ஒற்றுமையை மறைமுகமாக வலியுறுத்தும் ஒரு முக்கியமான விழா தான் தேர் விழா. பல தரப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து வடம் பிடித்து தேரை இழுத்துச் செல்வார்கள். முழுக்க முழுக்க மரச்சிற்பங்களால் ஆனது. தேர் திருவிழா என்பது பொதுவாக கோயில்களில் இறைவனை ஊர்வலமாக எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் ஒரு வாகனம்.

தமிழகத்தின் சின்னமே ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம். அந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர் திருவிழா நடைபெறும். இதைத் தொடர்ந்து தமிழத்தில் திருவாரூரில் தேர் திருவிழா நடைபெறும். சரி, ஏன் திருவிழாவின் போது தேர் இழுக்கிறார்கள்?

பொதுவாக ஒவ்வொருவரும் கோயிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது வழக்கம். அப்படி கோயிலுக்கு சென்று வழிபட முடியாத வயதா பெரியவர்கள், நோயாளிகள் ஆகியோர் வழிபட வேண்டும் என்பதற்காக கோயில் விமானம் போன்றிருக்கும் தேரில் ஒளி ஏற்றி, இறைவனது சிலையை வைத்து தேரை இழுத்துச் செல்வது என்பது காலங்காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம்.

தேரை இழுப்பதற்கு பெரிய கயிறு கட்டப்பட்டிருக்கும். அதனை வடம் என்று கூறுவார்கள். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடி வடம் பிடித்து மேல ரத வீதி, கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி என்று கோயிலின் நான்கு புறமும் உள்ள ரத வீதிகளைக் கடந்து இறுதியாக தேர் இருந்த இடத்தையே அடையும்.

இந்து கோயில்களில் தேர் வீதி உலா வரும் போது நாதஸ்வரம், மேளம், ஆகிய இசைக்கருவிளை வாசிக்கப்படும். மேலும், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காடியாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தேருக்குப் பின் திருமுறைகள் பாடப்பட்டு அடியார்கள் வருவார்கள்.

இறுதியாக தேர் நின்ற இட த்தை அடைந்தவுடன் பக்தர்கள், தேரின் சக்கரத்தில் உப்பு, மிளகு கொட்டி தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துவார்கள்.