துர்காஷ்டமி ஏன் கொண்டாடப்படுகிறது?

51

துர்காஷ்டமி ஏன் கொண்டாடப்படுகிறது?

துர்கா அஷ்டமி அல்லது மகா அஷ்டமி 5 நாட்கள் கொண்டாடப்படும். பெண்கள் அனைவரும் விரதம் மேற்கொண்டு பூஜை செய்து துர்கா தேவியை வழிபாடு செய்கிறார்கள். துர்கா தேவியின் ஆயுதங்கள் வணங்கப்படுவதால் இந்த நாள் ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் ஆயுதங்கள் அல்லது தற்காப்பு கலைகளைப் பயன்படுத்துவதால், விரா அஷ்டமி என்றும் இந்த நாள் அழைக்கப்படுகிறது. நவராத்திரி நாளின் 8ஆவது நாள் துர்காஷ்டமி. வீட்டில் கொலு வைத்திருக்கும் பெண்கள், துர்காஷ்டமி நாளில் 8 வயது நிரம்பிய சிறுமிகளை அழைத்து அவர்களை அம்பிகையாக பாவித்து வழிபாடு செய்வார்கள். அதோடு, அவர்களுக்கு இனிப்புகள், மங்கலப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கினால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அக்டோபர் 13 ஆம் தேதி துர்காஷ்டமி. அந்த வகையில் இந்த ஆண்டு இன்று தான் துர்காஷ்டமி. துர்கா பூஜையின் முக்கியமான நாட்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நாளில் நவராத்திரியின் 9 தேவிகளும் வழிபடப்படுகின்றன. சிறுமிகள் மற்றும் திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதற்கு குமாரி பூஜை அல்லது கன்னி பூஜை என்று பெயர்.

துர்காஷ்டமி நாளில் சாமுண்டா தேவி அன்னை துர்காவின் நெற்றியிலிருந்து தோன்றி மகிஷாசுரனின் கூட்டாளி பேய்களான சாந்தா, முண்டா மற்றும் ரக்தாபிஜா ஆகியவற்றை அழித்துவிட்டார். பிராமணி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, நரசிங்கி, இந்திராணி மற்றும் சாமுண்டா ஆகியவை துர்கா பூஜையின் போது வழிபடும் அஷ்ட சக்திகள்.

துர்காஷ்டமி நாளின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று அஷ்டமி திதி முடிந்து நவமி திதி தொடங்கும் சமயத்தில் நடைபெறும் சாந்தி பூஜை ஆகும். கிட்ட த்தட்ட 48 நிமிடம் வரை இந்த பூஜை செய்யப்படும். அதுவும் மாலை 7.43 மணி முதல் இரவு 8.31 வரை இருக்கும். இந்த பூஜை நேரத்தின் போது விலங்கு ஒன்றை பலி கொடுத்து யாகம் செய்வது வழக்கம். பலி கொடுக்க விரும்பாதவர்கள் வாழை, வெள்ளரி அல்லது பூசணிக்காய் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யலாம். சாந்தி பூஜையின் போது 108 மண் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடலாம்.