தை அமாவாசை: பிண்டம் வைத்து வழிபட சரியான நேரம் எது?

193

தை அமாவாசை: பிண்டம் வைத்து வழிபட சரியான நேரம் எது?

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும். அதிலும், ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்கள் மிகவும் விசேஷமானது. ஆடி அமாவாசை நாளில் பித்ருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு வருவதாக ஐதீகம். மகாளய அமாவாசை அன்று பித்ருக்கள் பூலோகம் வந்தடைந்து, மகாளய பட்ச காலத்தில் தங்கியிருந்து ஆசி புரிவார்கள். தை அமாவாசை நாளன்று பித்ருக்கள் தர்ப்பணம் கொடுக்கும் நம் சந்ததிகளுக்கு அருளும், ஆசியும் வழங்கி மீண்டும் பிதுர் லோகம் திரும்புவதாக ஐதீகம்.

ஜனவரி 31 ஆம் தேதியான இன்று பிற்பகல் 1.59 மணிக்கு அமாவாசை திதி தொடங்கி பிப்ரவரி 1 ஆம் தேதி செவ்வாய் கிழமை பிற்பகல் 12.02 வரை அமாவாசை திதி உள்ளது. ஆதால், திங்கள் கிழமையான இன்று நாள் முழுவதும் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கலாம்.

ஒவ்வொரு அமாவாசைக்கும் முன்னோர்களுக்கு மறக்காமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அப்படி தர்ப்பணம் கொடுப்பவர்கள், கடற்கரை பகுதிகளிலும், ஆற்றங்கரையிலும், நதிக்கரையிலும், நீர் நிலைகளிலும் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் அவசியம்.

அமாவாசை நாளன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்து செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். தர்ப்பணம் செய்து முடித்த பின்பு வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படையலிட்டு, சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது என்பது தர்ப்பணத்தில் அடங்கும்.

குடும்பத்தில் ஒருவர் இறந்தால், அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும், அவர் இறந்த திதியில் நாம் வீட்டில் அல்லது கோயிலுக்கு சென்று செய்யும் வழிபாடு சிரார்த்தம். இதில், பிண்டம் வைத்து வழிபடுவது என்பது சிறந்தது. குறிப்பாக ஒருவர் இறந்த நாளன்று வரும் திதியில் செய்வது சிரார்த்தம் என்று சாஸ்திரம் சொல்கிறது.

தாய், தந்தை இல்லாத ஆண்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

தர்ப்பணம் கொடுக்க காலை 09.00 – 10.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் 12.00 – 01.30 மணிக்குள்ளாகவும் கொடுக்கலாம். பிண்டம் வைத்து வழிபடுவதற்கும் பிற்பகல் 12 மணி முதல் 1.30 மணிக்குள்ளாக கொடுக்கலாம். படையலும் 12 – 1.30 மணிக்குள்ளாக வைக்கலாம்.