நம்மை அறிந்துகொள்ள உதவும் சிவ மந்திரம்!

107

நம்மை அறிந்துகொள்ள உதவும் சிவ மந்திரம்!

சி – தேயு (நெருப்பு), அநாகதம், உடுக்கை ஏந்திய வலக்கரத்தையும் குறிக்கும்.

வ – வாயு (காற்று), விசுத்தி, தூக்கிய திருவடியைச் காட்டும் இடதுகரத்தையும் குறிக்கும்.

ய – ஆகாயம் (வெளி), ஆக்ஞை, அஞ்சேல் என்றருளும் வலது அபயகரத்தையும் குறிக்கும்.

ந – பிரித்வி (மண்), சுவாதிஷ்டானம், அனலேந்திய இடக்கரத்தையும் குறிக்கும்.

ம – அப்பு (நீர்), மணிபூரகம், முயலகனின்மேல் ஊன்றிய திருவடியையும் குறிக்கும்.

சிவ =வ-பிராணன் எனும் காற்று (மூச்சை உள் இழுப்பது)

சி – நெருப்பு (மூச்சை வெளிவிடுதல்)

இதை ஆழமாகவும், அமைதியுடனும் செய்யும்போது பல சூட்சுமங்கள் புலப்படும். நம்மை நாம் அறிவதற்கு முதல்படியே இது தான். இதனாலேயே கோயில்களில் “சிவசிவ” என்று போட்டிருப்பார்கள். மூச்சை இப்படியே கவனிக்கும் போது, மனம் ஒருமைப்பட ஆரம்பிக்கும். அமைதி கிடைக்கும், தெழிவு பிறக்கும். வாழ்க்கையை புரிந்துகொள்வது சுலபமாகும்.

பிராணனே சகல இயக்கங்களுக்கும் மூலம். சுவாச செயலை நாம் நன்றியுடன் அவதானிப்போமானால், அதுவே ஞான ஒளியாகி இருளை விலக்கும், அறியாமையை போக்கும்.

கொள்வதுதா னெளிதல்ல வெகுநாட் செல்லுங் குரங்கதனை கொம்புதனிற் பாயமற்றான் நல்லுவது மனதுரிமைக் கொண்டல்லோ நாடாத ஞானநிலை வலுத்துப்போச்சு துள்ளாமல் மனமடங்கிச் சோதிகண்டால் துலங்குமடா உன்றேகங் காந்தியாகும் விள்ளாமல் கற்பமதை பின்னே கொள்ளு விளங்குமடா உன்றேகம் விழுகாதுபாரே.

அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன

அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன

அஞ்சையுங் கூடத் தடுக்கவல் லார்கட்கே

அஞ்சாதி யாதி அகம்புக லாமே

நமசிவாய என்கிற பஞ்சாட்சர மந்திரம் நம் உடலில் சுற்றித் திரியும் ஐந்து மதயானைகளை அடக்குகிற ஒரு அங்குசம்.

ய …………ஒலி ……..காது

வ ………….வாசனை……மூக்கு

சி ………….பார்வை……..கண்

ம ………….ருசி……………..நாக்கு

ந ………… தொடுதல் ……..தோல்

இந்த மந்திர எழுத்துக்கள் மூலம் ஐந்து புலனுறுப்புக்களையும் அதைச் சார்ந்த மாத்திரைகளையும் கட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் சிவானுபவத்தை அடையலாம்.