நம் மனதில் நினைத்தது எல்லாம் நிறைவேற என்ன தானம் செய்ய வேண்டும்?

93

நம் மனதில் நினைத்தது எல்லாம் நிறைவேற என்ன தானம் செய்ய வேண்டும்?

சில வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கு, சில பரிகாரங்களை செய்தால் உடனே நமக்கு பலன்கள் கிடைப்பது உண்டு. அந்த வகையில் நம் மனதில் நினைக்கும் வேண்டுதல்கள், கோரிக்கைகள் அல்லது ஆசைகள் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே நிறைவேறுவதற்கு உரிய எளிய சாஸ்திர பரிகாரம் ஒன்று உண்டு. இதை செய்வதால் நமக்கு தீராத ஆசைகளும், வேண்டுதல்களும் தீர்வதாக நம்பிக்கை உண்டாகிறது.

எல்லோருக்கும் தங்களுடைய மனதில் ஒவ்வொரு ஆசைகளும், வேண்டுதல்களும் இருக்கும். அது பலிக்க வேண்டும் என்கிற தீராத பிரார்த்தனை இருப்பவர்கள், எளிதாக இந்த ஒரு விஷயத்தை செய்து பாருங்கள். தொன்று தொட்டு நம்முடைய பாரம்பரிய வழக்கப்படி நினைத்தது நிறைவேற, வெற்றி உண்டாக விநாயகருக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். தேங்காய் உடைத்து விட்டு செய்யும் எந்த ஒரு காரியமும் தடை இல்லாமல் அப்படியே நடக்கும் என்பது தான் ஐதீகம்.

அந்த வகையில் இந்த ஒரு விஷயமும் அடங்கும். கல்யாண வீடுகளில் கடைசியாக திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் உறவினர்களிடம், நண்பர்களிடம் தேங்காய் பை ஒன்றை கொடுப்பதை நாம் பார்த்திருப்போம். அவர்கள் ஆசீர்வதித்த ஆசீர்வாதம் அப்படியே பலிக்க வேண்டும். மனதில் நினைத்த விஷயம் அப்படியே மணமக்களுக்கு நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே தேங்காயை தானமாக கொடுத்து வழி அனுப்புகிறோம்.

இந்த தேங்காய் ஆன்மீகத்தில் ரொம்பவே பெரிய பங்கு வகிக்கிறது. தேங்காய் இல்லாமல் பூஜைகள் நிறைவேற்றப்படுவது கிடையாது. எந்த ஒரு நல்ல விஷயம், பூஜை, புனஸ்காரம் செய்தாலும் அதில் கட்டாயம் தேங்காய் இடம் பெற்றிருக்க வேண்டும். தேங்காய் கலசம் வைப்பது அல்லது உடைத்து இரண்டு புறமும் வைத்து வழிபடுவது, தேங்காய் தண்ணீர் வைத்து பூஜைகள் செய்வது போன்றவையும் நம் வேண்டுதல்களை பலிக்க செய்யும் அற்புத பரிகாரங்களாகும்

எனவே தேங்காய் இல்லாமல் எந்த ஒரு பூஜையையும் செய்ய வேண்டாம். நீங்கள் வீட்டில் சாதாரணமாக வெள்ளிக்கிழமை பூஜை செய்யும் பொழுதும், தேங்காய் வைத்து செய்து பாருங்கள், உங்களுடைய வேண்டுதல் விரைவாகவே நிறைவேறுவதை உணர முடியும். அந்த அளவிற்கு தேங்காயில் இருக்கும் மகத்துவம் அபரிமிதமானது.

தேங்காயில் பூ இருந்தால் ரொம்பவே அதிர்ஷ்டம் என்றெல்லாம் கூறப்படுவது உண்டு. வீட்டில் தேங்காய் மரம் வளர்க்க விரும்புவர்கள், அதனுடன் தென்னம்பிள்ளையையும் சேர்த்து வைத்தால் அந்த வீட்டில் சுபீட்சம் நிலைக்கும். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை, எனவே தேங்காயை தனியாக மரமாக வைக்காமல், தென்னம்பிள்ளையுடன் சேர்த்து வையுங்கள்.

இந்த தேங்காயை நீங்கள் யாராவது ஒருவருக்கு தானம் கொடுத்து விட்டு உங்களுடைய வேண்டுதலை வைத்தால், எந்த ஒரு விஷயமும் தடை இல்லாமல் நடக்கும். கோவிலுக்கு செல்கிறீர்கள் என்றால் தேங்காயை கையோடு கொண்டு செல்லுங்கள். இதை சுவாமிக்கு உடைத்து, நீங்கள் வழிபட்டால் வேண்டியது நிறைவேறும். அதுபோல அங்கிருக்கும் பக்தர்களில் யாராவது ஒருவருக்கு தேங்காய் தானம் செய்யுங்கள்.

இதனால் உங்களுடைய வேண்டுதல் தடை இல்லாமல் பலிக்கும். வீட்டில் பூஜை செய்தாலும் தேங்காய் வைத்து பூஜை செய்து, அதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தானம் கொடுங்கள். தேங்காய் கொண்டு செய்யப்படும் சாதம் அல்லது நைவேத்தியங்கள் பக்தர்களுக்கோ அல்லது ஏழை எளியவர்களுக்கோ அன்னதானம் செய்யும் பொழுது எவ்வளவு கடினமான பிரார்த்தனையாக இருந்தாலும், உங்களுடைய ஆசைகள், வேண்டுதல்கள் நிச்சயம் தடை இல்லாமல் நடக்கும் என்பது நம்பிக்கை.