நவபாஷாணத்தால் உருவான பழனி முருகன் சிலை!

253

நவபாஷாண மூலிகையால் உருவான பழனி முருகன் சிலை!

பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவர் போகர். சித்த மருத்துவத்தில் வித்தகர். இவரது சீடர் தான் புலிப்பாணி சித்தர். பழனி மலையில் குடிகொண்டிருக்கும் தண்டாயுதபாணி முருகன் கோயில் சிலையை உருவாக்கியவர் போகர் சித்தர். இவர், 9 வகையான விஷ மூலிகைகளை நன்மை பயக்கும் வகையில் கலந்து நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார்.

போகர், முருகன் சிலையை செய்யும் போது 9 வகையான விஷ மூலிகைகளைக் கொண்டு சிலை செய்கிறாரே, இவை மனிதர்களை எப்படி குணப்படுத்தும்? மாறாக அவர்களது உயிரையல்லவா எடுத்துவிடும் என்று கருதிய புலிப்பாணி தனது குருநாதரிடம் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த போகர், இந்த 9 மூலிகைகளை ஒரு குறிப்பிட்ட விகிதப்படி கலந்தால் நவபாஷாணம் என்ற மருந்து கிடைக்கும்.

ஆனால், இந்த மருந்தை நேரடியாக சாப்பிடக் கூடாது. அப்படி நேரடியாக சாப்பிட்டால் மரணம் நேரிடும். நவபாஷாணத்தை சிலையாக வடித்து அதற்கு அபிஷேகம் செய்யும் பொருட்களை சாப்பிட்டால் அது மருந்தாக மாறிவிடும். அதோடு மட்டுமல்லாமல் நவபாஷாணத்தின் வாசம் பட்டால் மனிதர்கள் புத்துணர்வு பெறுவார்கள். இந்த முருகன் சிலையானது கலியுகம் முடியும் வரையில் அப்படியே அங்கேயே இருக்கும். முருகனின் அருளால் மக்களுக்கு எந்த துன்பங்கள், கஷ்டங்கள் வராது என்பது போகர் வாக்கு.

பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு

கௌரி கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை

பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி

நலமான மனோம்மணி கடாட்சதாலே நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு – போகர் எழுதியது.

பழனிமலை தண்டாயுதபாணி முருகன் விக்கிரகம் முழுக்க முழுக்க பல செய்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றை முழுமையாக சுத்திகரித்த பின்பு உருவாக்கப்பட்டது என்று இந்த பாடல் மூலமாக போகர் கூறியுள்ளார்.

9 வகையான நவபாஷாணம்:

  1. கௌரிப் பாஷாணம் – Arsenic pentasulfide
  2. கெந்தகப் பாஷாணம் – Sulfur
  3. சீலைப் பாஷாணம் – Arsenic Di sulphite
  4. வீரப் பாஷாணம் – Mercuric Chloride
  5. கச்சாலப் பாஷாணம் – சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை
  6. வெள்ளைப் பாஷாணம் – Arcenic Tri Oxide
  7. தொட்டிப் பாஷாணம் – சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை
  8. சூதப் பாஷாணம் – Mercury
  9. சங்குப் பாஷாணம் – சரியான ஆய்வு அறிவிக்கை கிடைக்கவில்லை

பழனிமலையில் போகர் சமாதி அடைந்துள்ளார். போகர் சமாதியானது போகர் சந்நிதி என்று அழைக்கப்படுகிறது. இந்த சந்நிதியின் கீழ் தான் அவர் ஜீவசமாதி அடைந்தார் என்றும், போகர் சன்னிதியிலிருந்து கருவறை

இந்த சந்நிதியின் கீழே ஜீவசமாதி அடைந்தார் என்றும், இந்த சன்னிதியிலிருந்து மூலவர் கருவறை வரை சுரங்கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

போகர் சித்தரின் மூல மந்திரம்:

ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகா போகர் சித்த சுவாமியே போற்றி!