நவராத்திரி கொலு வைக்கும் முறை:நவராத்திரி கொலு எத்தனை படி வைக்கலாம்? எப்படி வைக்கலாம்?

118

நவராத்திரி கொலு வைக்கும் முறை:நவராத்திரி கொலு எத்தனை படி வைக்கலாம்? எப்படி வைக்கலாம்?

நவராத்திரிக்கு கொலு வைப்பதே ஒரு பண்டிகை போல கோலாகலமாக இருக்கும். இப்போதெல்லாம் கொலுப்படிகள் ரெடிமேடாகவே கிடைக்கின்றன. நீங்கள் எத்தனை படிகள் கொலு வைக்க விரும்புகிறீர்களோ, அந்த அளவுக்கு ஏற்றார்போல வாங்கி உடனடியாக பிக்ஸ் செய்து கொலு வைக்க தயாராகிவிடலாம்.

கொலு வைக்கும் முன்பு, படிகள் மீது பட்டு புடவை அல்லது புதிய புடைவை அல்லது துணி சாற்றி, அதன் பிறகுதான் பொம்மைகளை அடுக்க வேண்டும். எனவே கொலு வைப்பதற்காக புதிதாக புடவை வாங்கலாம் அல்லது பட்டு துணி சாற்றினாலும் பொருத்தமாக இருக்கும். கொலுப்படிகள் மூன்று, ஐந்து, ஏழு என்று ஒற்றைப்படையில் இருக்க வேண்டும்.

கடவுள் முதல் ஓரறிவு படைப்புகள் வரை:

பொதுவாக, பண்டைய பெரும்பாலானவர்களின் வீட்டில் ஏழு படிகள் அல்லது ஒன்பது படிகள் வைத்து தான் கொலு வைப்பார்கள். ஆனால் தற்பொழுது இடமின்மை அல்லது வேறு சில காரணங்களால் ஐந்து படிகள் மூன்று படிகள் என்று வைப்பவர்களும் இருக்கின்றனர். எத்தனை படிகள் வைத்தாலுமே, கீழிருந்து மேலாக 1,2 என்று எண்ணவேண்டும்.

மேலே இருக்கும் படியில், உயர்ந்த படியில் கடவுளின் பொம்மைகளை வைக்க வேண்டும். அதன் பிறகு சித்தர்கள், பிறகு மனிதர்கள், அதன் பிறகு வெவ்வேறு இயிரினங்கள் என்று வைக்க வேண்டும். படிகளின் எண்ணிக்கையை கீழிருந்து மேலாக, ஒன்று, இரண்டு என்று எண்ண வேண்டும்.

முதல் படியில் வைக்க வேண்டிய பொம்மைகள்: மரம், செடி, கொடி, பூக்கள், போன்ற ஓரறிவு படைப்புகள்.

இரண்டாம் படியில் வைக்க வேண்டிய பொம்மைகள்: நத்தை, சங்கு போன்ற ஈரறிவு உயிரினங்கள்.

மூன்றாம் படியில் வைக்க வேண்டிய பொம்மைகள்: கரையான், எறும்புகள் போன்ற உயிரினங்கள்.

நான்காம் படியில் வைக்க வேண்டிய பொம்மைகள்: பூச்சி வகைகள், ஊர்வன, பறப்பன போன்ற உயிரினங்கள்.

ஐந்தாம் படியில் வைக்க வேண்டிய பொம்மைகள்: பறவைகள், விலங்கினங்கள் பொம்மைகள்.

ஆறாம் படியில் வைக்க வேண்டிய பொம்மைகள்: நடனமாடும் பொம்மைகள், மனிதர்களின் பொம்மைகளை வைக்கலாம்.

ஏழாம் படியில் வைக்க வேண்டிய பொம்மைகள்: சாய் பாபா, மகா பெரியவர், ராகவேந்திரர் போன்ற சித்தர்கள், மகான்களின் பொம்மைகளை வைக்கலாம்.

எட்டாம் படியில் வைக்க வேண்டிய பொம்மைகள்: அஷ்டலக்ஷ்மி, தசாவாதாரம் போன்ற இறைவனின் அவதாரங்களை வைக்கலாம்.

ஒன்பதாம் படியில் வைக்க வேண்டிய பொம்மைகள்: கலசம் வைத்து, சிவ பெருமான், விஷ்ணு, பிரம்மா, விநாயகர், ஆகிய கடவுளரின் பொம்மைகளை வைக்கலாம்..

ஒரு சிலரின் வீட்டில் ஐந்து படி தான் இருக்கிறது எப்படி வைக்கலாம் என்றால், எத்தனை படிகள் வைத்தாலும், மேல் படியில் கடவுளின் சிலையைத்தான் வைக்க வேண்டும். பெரும்பாலும் சிவன் விஷ்ணு பிரம்மா, சிவபெருமானும் பார்வதி, உள்ளிட்டவர்களின் சிலைகளை முதல் படியில் வைக்கலாம்.

ஒரு சிலரின் வீட்டில், வழக்கமாக முதல் படியில் கலசம் மட்டும் வைத்து வழிபடும் பழக்கமும் உள்ளது. கலசம் வைத்த பிறகு அதற்கு அடுத்ததாக இருக்கும் படியில் மும்மூர்த்திகள், சக்தி தேவி, லட்சுமி தேவியின் பொம்மைகளை வைக்கும் பழக்கம் இருக்கிறது.

பொம்மைகள் நிறைய இருக்கும் வீட்டில் படிகள் வைக்கும் பொழுது எல்லாப்படிகளிலுமே கடவுள் சிலைகள்தான் வைக்கப்படும். உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு வாத்தியங்களை இசைக்கும் விநாயகர் பொம்மைகள் மிகவும் பிரபலமாக இருந்தது. அதேபோல கிரிக்கெட், புட்பால் என்று விளையாட்டு பொருட்களை வைத்திருக்கும் விநாயகர் பொம்மைகளும் மிகவும் பிரபலமானது. அறுபடை முருகர், ராமர் பட்டாபிஷேகம் நடக்கும் பொம்மைகள் உள்ளிட்டவை மிகவும் பிரசித்தி பெற்றவை. நீங்கள் திருமண செட், ஃபேன்சியான பொம்மைகள், அழகிகள், நடனமாடும் பெண்கள், கிருஷ்ணர் கோபியர், போன்ற பொம்மைகளை படிகளில் வைக்காமல் தனியே பக்கத்தில் மணல் பரப்பிலும் வைக்கலாம்.

முக்கிய குறிப்பு:

கொலு படிகளுக்கு கீழே தினமும் விளக்கேற்றி, காலையும் மாலையும் நைவேத்தியம் செய்ய வேண்டும். ஒன்பது நாட்களுமே தவறாமல் செய்வது மிக மிக அவசியம்.