நவராத்திரி 4ஆவது நாள்: கூஷ்மாண்டா தேவி வழிபாடு!

108

நவராத்திரி 4ஆவது நாள்: கூஷ்மாண்டா தேவி வழிபாடு!

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் இந்த நவராத்திரி விரதம். நவராத்திரி என்றாலே 9 இரவுகள். நவம் என்பது 9ஐ குறிக்கும். இதற்கு மற்றொரு பொருளும் இருக்கிறது. அதாவது நவம் என்றால் புதுமை.

நவராத்திரி என்றாலே 9 இரவுகள். இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்).

ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியை போற்றும் விரதமாக இந்த நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது மனிதனுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படக் கூடிய ஆற்றலைக் கொடுக்கிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும்.

பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, சைலபுத்ரி, காத்யாயினி, ஸ்கந்தமாதா, மகாகௌரி, சித்திதாத்திரி, காளராத்திரி ஆகிய 9 தேவிகளையும் இந்த 9 நவராத்திரி நாட்கள் பூஜித்து வழிபடுவது. நவராத்திரி நிறைவு பெறும் நாளாக விஜயதசமி அன்று தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழா வட இந்தியாவில் அதிகளவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (7ஆம் தேதி) தொடங்கி 15 மற்றும் 16ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் இந்த நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது. சரி, நவராத்திரியின் போது வழிபடும் 9 தேவிகள் குறித்து இந்தப் பதிவில் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். இதற்கு முன்னதாக நவராத்திரி முதல், 2ஆம் மற்றும் 3ஆம் நாளுக்கான தேவியான சைலபுத்ரி வழிபாடு, பிரம்மச்சரணி தேவி, சந்திரகாண்டா தேவி குறித்து பார்த்தோம்.

இந்தப் பதிவில் நவராத்திரி 4ஆம் நாளில், நவதுர்க்கையின் 4ஆவது அம்சமான கூஷ்மாண்டா தேவியை பூஜித்து வழிபட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமாக பாவங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் கிடைக்கும் என்பது ஐதீகம். கூஷ்மாண்டா மூன்று பகுதிகளை கொண்டது. கு என்றால் சிறிய, உஷ்மா என்றால் வெப்பமான, ஆண்டா என்றால் உருண்டை என்று  பொருள் கொண்டது.

இந்த மூன்றையும் சேர்த்தால் சிறிய வெப்பமான உருண்டையான உலகை பொருளாக கொள்ளலாம். அதாவது, உலகை படைத்தவள் என்ற பொருள். அன்னை ஆதிசக்தியானவள் துர்கா தேவியின் படைத்தல் உருவம் கூஷ்மாண்டா என்பதாகும். ஒரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகமே அழிந்து போனது. அப்போது எங்கு பார்த்தாலும் ஒரே இருள் சூழந்து காணப்பட்டது. தேவி கூஷ்மாண்டா அப்போது சிரித்தாள்.

இதன் காரணமாக இருள் விலகி ஒளி பிறந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சிம்ம வாகனத்தில் தனது கட்டுரங்களுடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். கூஷ்மாண்டா தேவியின் 8 கரங்களில் பாசம், அங்குசம், வில், சூலம் ஆகியவை இருக்கும். 8ஆவது கரத்தில் கலசம் இருக்கும்.

எட்டுகரங்களில் முறையே பாசம், அங்குசம், வில், சூலம் இருக்கும். இவளின் எட்டாவது கரத்தில் கலசம் உண்டு. வட மொழியில் கூஷ்மாண்டம் என்பதற்கு பூசணிக்காய் என்ற ஒரு பொருளும் இருக்கிறது. கூஷ்மாண்டா தேவியை வழிபட பாவத்தை அழித்து இன்பம் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.

கூஷ்மாண்டா தேவியின் மந்திரம்:

சூரா சம்பூர்ண கலசம் ருத்ரபலு தவமேவச்சா ததான ஹஸ்த பத்மப்யாம் கூஷ்மாண்டா சுபதாஸ்து மே

தினந்தோறும் கூஷ்மாண்டா தேவியை வழிபட்டு இந்த மந்திரத்தை சொல்லி வர பாவங்கள் அழிந்து இன்பம் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியில் உள்ள கதம்பூர் என்ற பகுதியின் கூஷ்மாண்டா தேவியின் கோயில் உள்ளது.