1) இறைவனின் பார்வையில் எது நல்லநேரம் :
நல்லவற்றை நினைக்கும் போது
நல்லவற்றை பார்க்கும் போது
நல்லவற்றை கேட்கும் போது
நல்லவற்றை பேசும் போது
2) இறைவனின் பார்வையில் எது எமகண்டம் :
மற்றவர்களை பார்த்து பொறாமைப்படும் நேரம்
3) இறைவனின் பார்வையில் எது இராகு காலம் :
அகங்காரம் கொள்ளும் நேரம்
பாசம் கண்களை மறைக்கும் நேரம்
ஆசை எல்லை மீறும் தருணம்
கோபப்படும் நேரம்
தேகம் கவர்ச்சிக்கும் நேரம்
4) இறைவனின் பார்வையில் எது குளிகை :
கவலைப்படும் நேரம்
கலக்கமுறும் நேரம்
பயப்படும் நேரம்
5) இறைவனின் பார்வையில் எது பிரம்மமுகூர்த்தம் :
தன்னை ஆன்மா என்று உணரும் போது
பிரம்ம லோகத்தில் உள்ள ஆன்மாவை நினைக்கும் போது
6) இறைவனின் பார்வையில் எது சுப முகூர்த்தம் :
தன்னலம் கருதாமல் பிறர் நலன் கருதி
உதவி செய்யும் தருணம் முழுவதும்.