பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?

93

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?

பசு மாட்டிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுத்து வழிபாடு செய்தால் நம் பாவம் நீங்கும் என்பது ஐதீகம். பசுவை பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான தெய்வங்களை பூஜை செய்த பலன் கிடைக்கும். அப்படி பசுவை பூஜிக்கும் போது அதற்குரிய மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் இன்னும் சிறப்பு.

மந்திரம்: ஸர்வ காம துகே தேவி ஸர்வ தீர்த்தாபிசோசினிபாவனே ஸுரபி ஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே!

மந்திர விளக்கம்: எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்பவளே… எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே… மங்கள வடிவானவளே…காமதேனுவே உன்னை வணங்குகிறேன். இந்த மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலமாக முன்னோர் சாபம், குடும்ப சாபம் தீரும். பிதுர் ஆசி பூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்ட சுப விஷயங்கள் விரைவில் நடந்தேறும்.

முதலில் அறியாமல் செய்த பாவங்கள் நீங்கும். பிரம்மஹத்தி தோஷங்கள் விலகும். பல நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் 16 அகத்திக்கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பசு இருக்கும் இட த்திற்கு சென்று அதன் அருகில் அமர்ந்து கொண்டு சொல்லும் மந்திரம், ஜபம், தர்ம காரியங்கள் ஆகியவை நூறு மடங்கு பலனைத் தரும் என்பது ஐதீகம்.