பல்லக்கு சுமப்பதால் பாவம் தீருமா?

129

பல்லக்கு சுமப்பதால் பாவம் தீருமா?

ராசிக்கட்டத்தில் காலபுருஷனுக்கு 5ஆவது பாவமாக வருவது சிம்ம ராசி. பூர்வ புண்ணியம், அதிர்ஷ்டம், குல தெய்வ வழிபாடு, வம்சாவழி, புத்திர பாக்கியம், தவம், வேதம், மந்திரம் கற்றல் ஆகியவற்றை இந்த 5ஆவது பாவம் தான் குறிக்கும். சிம்ம ராசியின் அதிபதி சூரியன். அதிகாரம், அழியா புகழ், அரசு, அரசாங்க ஆதரவு, பொது சேவை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நன்னெறி, மக்களை வழி நடத்துதல் ஆகிய காரகங்களை குறிப்பார்.

சிம்ம ராசியில் இடம் பெறும் மகம் நட்சத்திரத்தின் உறுவம் கலப்பை, பல்லக்கு, கிரீடம் போன்றவைகளாகும். பல்லக்கில் அமர்வது, கிரீடத்தை தலையில் சூட்டுவது அனைவருக்கும் நடந்து விடுவதில்லை. பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். சிம்ம ராசிக்கு ஐந்து மற்றும் எட்டுக்குடையவர் குரு.

ஐந்தாம் பாவம் பூர்வ புண்ணியத்தையும், எட்டாம் பாவம் போராட்டம், அவமானம், ஆபத்துக்களை குறிக்கும். பல தியாகங்களுக்கு பிறகுதான் அவர்களுக்கு இந்த “குரு” என்ற பட்டம் கிடைத்திருக்கும்.

சிம்மம்−சூரியன்: சிவவழிபாடு, சேவை

மகம−கேது: துறவு, தியாகம்

மடாதிபதிகள்−குரு

சூரியன்+குரு+கேது

பழமையான சைவ மடங்கள் மற்றும் மடாதிபதிகள்.

மக்கள் சேவையும் இறைவழிபாடு செய்யும் குருமார்கள், பல்லக்கில் ஏறலாம் என்பதை உறுதி செய்கிறது. பொதுமக்களை குறிக்கும் சனிபகவான் சிம்ம ராசிக்கு சேவை மனப்பான்மையை குறிக்கும் ஆறாம் பாவத்திற்கும், எதிர்பாலர் உறவுமுறை (பக்தர்கள்) குறிக்கும்.

பல்லக்கை சுமப்பதால நமது பாவங்கள் தீரும். ஆண்டவனை சுமந்தாலும், அடியாரை சுமந்தாலும் நமது அல்லல் களையும் என்பது ஐதீகம்.