பல்லி விழுந்தால் என்னென்ன பலன்கள்?

86

பல்லி விழுந்தால் என்னென்ன பலன்கள்?

சர்வ சாதாரணமாகவே வீடுகளில் பல்லி இருக்கும். அதனால், யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. கேது பகவானைக் குறிக்கும் பல்லி நமது மீது விழுந்தால் தான் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் சொல்வார்கள். நம் உடலில் எங்கு பல்லி விழுந்தால் என்ன பலன் என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்….

தலையில் பல்லி விழுந்தால்….

பல்லி தலையில் விழுந்தால், நமக்கு ஏதோ ஒரு வழியில் கெட்ட நேரம் வரப் போகிறது என்பது ஆகும். அந்த கெட்ட நேரத்தை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். மற்றவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு உண்டாகும். மன நிம்மதி இருக்காது. நெருங்கிய உறவினர்கள் அல்லது நன்கு பழக்கமானவர்கள் மரணிக்கும் நிலை வரும்.

தலைமுடியில் பல்லி விழுந்தால்….

தலையில் இல்லாமல் தலைமுடியின் மேல் பல்லி விழுந்தால் ஏதோ ஒரு வகையில் நன்மை நடக்கப் போகிறது என்று அர்த்தம்.

நெற்றியில் பல்லி விழுந்தால்….

நெற்றியில் இட து பக்கமாக பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். இதுவே வலது பக்கமாக பல்லி விழுந்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.

முகத்தில் பல்லி விழுந்தால்…

முகத்தில் பல்லி விழுந்தால் உறவினர்களின் வருகை இருக்கும் என்று அர்த்தம்.

புருவத்தில் பல்லி விழுந்தால்…

புருவத்தில் பல்லி விழுந்தால் ராஜ பதவி அல்லது உயர் பதவியில் இருப்பவர்களிடமிருந்து ஏதேனும் உதவிகள் கிடைக்கும் என்று அர்த்தம்.

கன்னம் அல்லது கண்களில் பல்லி விழுந்தால்….

கன்னம் அல்லது கண்களில் பல்லி விழுந்தால் ஏதோ ஒரு வகையில் நீங்கள் தண்டிக்கபடுவீர்கள் என்று அர்த்தம்.

இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால்….

இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால் அன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று அர்த்தம்.

வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால்….

இதுவே வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால் உங்களுக்கு ஏதேனும் உடல் நலக் கோளாறு ஏற்படும் என்று அர்த்தம்.

பாதத்தில் பல்லி விழுந்தால்….

பாதத்தில் பல்லி விழுந்தால் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வீர்கள் என்று அர்த்தம்.

தொப்புளில் பல்லி விழுந்தால்….

தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் விலை மதிப்பில்லா பொருட்களான வைர வைடூரியங்கள், இரத்தின கற்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம்.

தொடையில் பல்லி விழுந்தால்….

தொடையில் பல்லி விழுந்தால் உங்களால் பெற்றோர்களுக்கு வருத்தம் ஏற்படும் என்பது ஆகும்.

மார்பு பகுதியில் பல்லி விழுந்தால்….

மார்பில் இட து பக்கமாக விழுந்தால் சுகம் கிடைக்கும் என்றும், வலது பக்கமாக விழுந்தால் இலாபம் கிடைக்கும் என்றும் அர்த்தம்.

இடது பக்க மார்பில் பல்லி விழுந்தால் சுகம் கிடைக்கும். அதுவே வலது பக்க மார்பில் பல்லி விழுந்தால் இலாபம் கிடைக்கும்.

கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால்….

கழுத்தின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் காரியங்களில் வெற்றி உண்டாகும். இதுவே கழுத்தின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் மற்றவர்களுடன் பகை உண்டாகும்.

முதுகில் பல்லி விழுந்தால்…

முதுகின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும். இதுவே வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் நஷ்டம் ஏற்படும்.

கண்ணில் பல்லி விழுந்தால்…

இடது பக்கம் உள்ள கண்ணில் பல்லி விழுந்தால் பயம் உண்டாகும். வலது பக்கம் உள்ள கண்ணில் பல்லி விழுந்தால் சுகம் உண்டாகும்.

தோள் பகுதியில் பல்லி விழுந்தால்….

தோள் பட்டையின் இடது பக்கமாக பல்லி விழுந்தால் யோகம் உண்டாகும். இதுவே வலது பக்கமாக பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும்.

மணிக்கட்டில் பல்லி விழுந்தால்….

மணிக்கட்டின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் கீர்த்தி உண்டாகும். வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் பீடை உண்டாகும்.

காதுப் பகுதியில் பல்லி விழுந்தால்….

இடது பக்கம் உள்ள காதுப் பகுதியில் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும். வலது பக்கம் விழுந்தால் ஆயுள் கூடும்.

உதட்டில் பல்லி விழுந்தால்….

உதட்டில் இடது பக்கமாக பல்லி விழுந்தால் வரவு உண்டாகும். வலது பக்கத்தில் பல்லி விழுந்தால் கஷ்டம் தான் ஏற்படும்.

முழங்காலில் பல்லி விழுந்தால்….

முழங்காலில் இடது பக்கமாக பல்லி விழுந்தால் பந்தனம் உண்டாகும். வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் உண்டாகும்.