பாம்பு புற்றுக்கு பால், முட்டை வைப்பது ஏன்?

144

பாம்பு புற்றுக்கு பால், முட்டை வைப்பது ஏன்?

வயல் வெளிகளிலும், மரத்தடிகளிலும், கோயில்களிலும் பாம்பு புற்றுகள் இருப்பதையும், அதற்கு பால், முட்டை வைப்பதையும் நாம் பார்த்திருப்போம். சினிமாவிலும் ஒரு சில காட்சிகளில் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றும் காட்சிகள் வைத்திருப்பார்கள். உண்மையில், பாம்பு புற்றுக்கு ஏன் பால், முட்டை வைக்க வேண்டும் என்பது குறித்து பெரும்பாலும் ஊற்றுகிறவர்களுக்கே தெரியாது.

ஒரு சிலர் பாம்பு பால் குடிக்கும், முட்டையும் சாப்பிடும் என்று கூறி அதற்கு வைக்கிறார்கள். அறிவியில் ரீதியாக பார்க்கையில் பாம்பானது, பால் மற்றும் முட்டை ஆகியவற்றை குடிக்காது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பழங்காலங்களில் மனிதர்கள் வசிக்கும் இடங்கள் பெருமாலும் நீர் நிலைகளைசு ற்றிலும், காடுகளை ஒட்டியும் இருந்தன. மேலும், அவர்கள் தங்களது உணவு தேவைக்காக காடுகளை சார்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

காட்டுப் பகுதிகளில் மனிதர்களை விட வனவிலங்குகளும், பாம்புகளும், விஷம் நிறைந்த பூச்சிகளும் தான் அதிகளவில் இருந்தன. அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வாழும் மனிதர்களின் எண்ணிக்கையை விட பாம்புகளின் இனப்பெருக்க விகிதம் அதிகமாகவே இருந்துள்ளது. காட்டுப் பகுதிக்குள் வாழ்ந்த மக்கள் விலங்குகளை மதித்தார்கள். ஆதலால், தான் அவர்கள் பாம்புகளை கொல்லாமல், அதன் இனப்பெருக்க விகிதத்தை கட்டுப்படுத்தவே முடிவு செய்தனர்.

பெண் பாம்பு தான் தனது உடலிலிருந்து ஒரு விதமான வாசனை திரவத்தை அனுப்பும். அதனை நுகரும் ஆண் பாம்பானது, பெண் பாம்பைத் தேடி வரும். இப்படி தான் பாம்புகளின் இனப்பெருக்கம் காலங்காலமாக நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், பாம்புகளை அழிப்பதைவிட அதன் இனப்பெருக்கத்தை தடுக்கவே விரும்பிய மக்கள் பால் மற்றும் முட்டையை வைத்தார்கள்.

ஏனென்றால், பெண் பாம்பிலிருந்து வரும் வாசனையை கட்டுபடுத்தும் சக்தியான பால் மற்றும் முட்டையிகிருந்து வரும் வாசனையானது தடுக்கிறது. இதனால், பெண் பாம்பின் வாசனை தடுக்கப்படும் இதன் மூலமாக பாம்புகளால் இனப்பெருக்க செய்ய முடியாது. இப்படியாக பாம்புகளின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.

பாம்புகளின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தவே பாம்பு புற்றுகளில் பால் மற்றும் முட்டை ஆகியவற்றை வைக்கிறோம். இதன் உண்மையான காரணம் தெரிந்து கொண்டால், பாம்புகளுக்கு பால் மற்றும் முட்டை வைக்கும் பழக்கத்தை மக்கள் குறிப்பாக பெண்கள் கடைபிடிக்கமாட்டார்கள் அல்லவா. அதற்காகத்தான் ஆன்மீக ரீதியிலான ஒரு காரணத்தை நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.