பிரதோஷ பூஜைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

22

பிரதோஷ பூஜைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

எந்த சிவன் கோவிலுக்கு சென்றாலும் பிரதோஷ வேளையில் நந்தியேம்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும் போது மூலவரை தரிசனம் செய்ய கோயிலுக்குள் செல்லக் கூடாது. கோயில் வலம் வருவது செய்யக் கூடாது. பிரதோஷ வேளையில் 4.30 முதல் 6.00 மணி வரை சிவபெருமான் நந்தி கொம்புகளுக்கு இடையே நார்த்தனம் ஆடுவதை தான் பிரதோஷ வழிபாடாக செய்கிறோம்.

கோயிலில் இருக்கும் வில்வ மரத்தின் இலைகளை பறிக்க கூடாது ஸ்வாமிக்கு கொடுக்க தான் என்றாலும் (பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, அஷ்டமி ) போன்ற நாட்களில் கண்டிப்பாக வில்வ இலைகள் பறிக்க கூடாது.

இரண்யனை நரசிம்மர் வதம் செய்தது பிரதோஷ நாளன்று தான் பிரதோஷ நேரத்தில் பகலும் இரவும் சேரும் நேரத்தில் தான் வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இல்லாமல் படிகட்டில் வைத்து வதம் செய்தார் கோயிலுக்கு செல்லும் போது படியில் அமர வேண்டாம் மேலும் பிரதோஷ நாளிலே நரசிம்மருக்கும் அபிஷேகம் நடைபெறும்.