பிரார்த்தனை எப்போது நிறைவேறும்?

83

பிரார்த்தனை எப்போது நிறைவேறும்?

பிரார்த்தனைகள் பலிக்கும் அந்த நேரத்தைதான், பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்கிறார்கள். இந்த நேரத்தில் செய்யும் பிரார்த்தனைகள் நிறைவேறும். சிலர் காலையில் 6 மணிக்கு எழுந்திருப்பார்கள். ஒரு சிலர் 8 மணிக்கு எழுந்திருப்பார்கள். இன்னும் சிலர் விடுமுறை தானே என்று கூறி 10 மணிக்கு தான் எழுந்திருப்பார்கள். சராசரியாக பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளாக எழுந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அதன் பிறகு அதுவே பழக்கமாகிவிடும் என்பதால், தினந்தோறும் 4 மணி முதல் 6 மணிக்குள்ளாக எழுந்து குளித்து முடித்து வீட்டில் பூஜையேற்றும் பழக்கத்தை முக்கியமானதாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால், பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் தேவர்களும், முன்னோர்களும் நமது வீட்டை நோக்கி வருவார்கள். அப்பொழுது விழித்திருந்து அவர்களை மனதால் நினைத்து வழிபட்டு, என்ன வரம் கேட்டாலும் கொடுக்க காத்திருப்பார்கள். அந்த நேரத்தில் தான் நாம் செய்யும் பிரார்த்தனைகள் பலிக்கும் என்றும் கூட சொல்வார்கள்.