பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்!

186

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்!

வீட்டில் எந்த ஒரு நல்ல காரியம் செய்வது என்றாலும் பிள்ளையார் பிடித்து வைத்து முதலில் அதற்கு பூஜை செய்வார்கள். அதன் பிறகு தான் மற்ற தெய்வங்களுக்கு பூஜை புனஷ்காரங்கள் எல்லாம் செய்யப்படும். எந்தவொரு செயலை செய்வது என்றாலும் பிள்ளையார் சுழி போட்டு தான் தொடங்குவார்கள். மஞ்சள், விபூதி, சந்தானம், குங்குமம் என்று பலவற்றிலும் பிள்ளையார் பிடித்துவைத்து வழிபடுவார்கள். சரி, பிள்ளையார் பிடித்து வழிபடுவதன் பலன்கள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்…

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்:

 1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். காரிய சித்தி தந்தருள்வார்.
 2. புற்று மண்ணினால் பிள்ளையார் பிடித்து வழிபட நோய்கள் தீரும். விவசாயம் செழிக்கும்.
 3. வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து விநாயகப் பெருமானை வழிபட உடல் சூடால் ஏற்படும் கொப்புளங்கள் (உடலில் உள்ளே, வெளியேயுள்ள கட்டிகள்) கரையும். வளம் தருவார்.
 4. கல் உப்பினால் பிள்ளையார் பிடித்து வழிபட எதிரிகளின் தொல்லை நீங்கும். எதிரிகளை விரட்டியடிப்பார்.
 5. குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட செவ்வாய் தோஷம் நீங்கும். குழந்தைகளை கல்வியில் வல்லவராக்குவார்.
 6. சந்தனத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட புத்திர பாக்கியம் கிடைக்கும்.
 7. வெள்ளெருக்கில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் பில்லி, சூனியம், கண் திருஷ்டி நீங்கும். செல்வ வளம் கிடைக்கும்.
 8. விபூதி கொண்டு பிள்ளையார் பிடித்து வழிபட உஷ்ண நோய்கள் நீங்கும்.
 9. சாணத்தால் பிள்ளையார் செய்து வழிபட சகல தோஷங்களும் நீங்கும். மேலும், வீட்டில் சுப நிகழ்ச்சிகளும் நடைபெற வழிவகை செய்யும்.
 10. வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்சம் விருத்தியாகும்.
 11. சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியத் தன்மை குறையும்.
 12. வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட கடன் தொல்லைகள் நீங்கும்.
 13. மண் விநாயகர் உயர் பதவிகளை கொடுப்பார்.
 14. கல் விநாயகர் வெற்றிகளை குவிப்பார்.
 15. புற்றுமண் விநாயகர் வியாபாரத்தை பெருக்குவார்.