சனிக்கிழமையில் புத்தாண்டு 2022: கருப்பு நிற ஆடை அணியலாமா?

120

புத்தாண்டில் கருப்பு ஆடை அணியலாமா?

பொதுவாக, புத்தாண்டு, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு, தீபாவளி என்று எந்த பண்டிகையாக இருந்தாலும் கருப்பு நிற ஆடையை யாரும் அணிவதில்லை. மாறாக எல்லாமே, எப்போதுமே மங்களகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கருப்பு நிறத்தைத் தவிர மற்ற நிறங்களில் தான் ஆடைகளை அணிவார்கள். உதாரணத்திற்கு வெள்ளை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ஊதா என்று நிறங்களில் ஆடை வாங்கி அதனை அணிவார்கள்.

கருப்பு நிற ஆடையானது சனி பகவானை குறிப்பதாலும், அது துக்கத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது, துக்க வீடுகளில் கருப்பு நிற ஆடைகளைத் தான் அதிகளவில் அணிந்திருப்பார்கள். மேலும், எதிர்ப்பை தெரிவிக்கவும் கருப்பு நிறங்களை பயன்படுத்துகின்றனர்.

ஆனால், உண்மையில் சனிக்கிழமை என்பது சனி பகவானுக்கு உகந்த நாள். அன்று சனி பகவானுக்கு பிடித்த நிறமான கருப்பு நிற த்தில் ஆடை அணிவது மிகவும் நல்லது. மேலும், கோயிலுக்கு சென்று எள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். சனி பகவானை நீதிமான், நீதிபதி, அவரவர் செய்த பாவங்களுக்கு ஏற்ப வினைகளை வழங்குவதில் அவர் நீதி தவறாதவர். தொழில் காரகன் கர்ம காரகனான சனி பகவான் ஆட்சி பலம் பெற்றால் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் உள்ளவர், விடா முயற்சியினால் உயர்ந்த நிலக்கு வருபவர், நிலையான சொத்து, நிலம், வாகனம், வீடு வாங்குபவர் தீர்க்காயுள் உள்ளவர்.

சனி பகவான் உச்ச நிலையில் இருந்தால் சாதனை படைக்கலாம். தொழில்துறைகளில் தலைமை பொறுப்பு வகிக்கலாம். ஏழரை சனி பிடியிலிருந்தும், அவரவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்பவும் பலன் தரும் சனி பகவான் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் அவருக்கு பிடித்த கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

அப்படியிருக்கும் போது நாளை (01-01-2022) 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கிறது. அதுவும் சனிக்கிழமையில் வரும் தொடங்குகிறது. ஆகையால் இந்த வருடம் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானுக்கு பிடித்த கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து சனி பகவானை வழிபடலாம். மேலும், சனிக்கிழமை. பார்வையற்றோர். மாற்றுத்திறனாளிகள், துப்புரவு தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் உதவும், தொண்டும் சனி பகவானுக்கு பிடித்தமானதாகும்.

இது தவிர, வாரத்தின் முதல் நாளான ஞாயிறு அன்று சூரிய பகவானுக்குரிய சிவப்பு நிறத்துடன் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறமும் அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் சூரிய பகவானின் அருள் கிடைக்கும்.

திங்கள் கிழமை என்பது சந்திர பகவானுக்குரியது. இந்த நாளில் வெண்மை மற்றும் சில்வர் நிறங்களில் ஆடை அணிந்தால் அவரது அருள் கிடைக்கும். மேலும், ஊதா நிறமும் அணிந்து கொள்ளலாம். திங்கள் கிழமை என்பது சிவபெருமானுக்குரிய கிழமையும் ஆகும். திங்கள் கிழமையில் பிரதோஷம் வந்தால் சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில் ஆடை அணிந்து சென்று சிவபெருமானை வழிபாடு செய்யலாம். இதன் மூலமாக சுபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

செவ்வாய் கிழழை முருகப் பெருமானுக்குரிய நாள். அன்றைய நாளில் செவ்வாய் கிரகத்திற்குரிய நிறங்களான சிவப்பு மற்றும் பிங்க் நிறத்தில் ஆடைகள் அணிந்து முருகப் பெருமானை வழிபாடு செய்யலாம்.

புதன் கிழமையை பொன் கிடைத்தாலும் பொன் கிடைக்காது என்பார்கள். புதன் பகவானுக்குரிய நாள் தான் புதன் கிழமை. இந்த நாளில் பச்சை ஆடை உடுத்தி நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானை வழிபட அவரது அனுக்கிரகம் கிடைக்கும்.

வியாழன் குருவுக்கு உகந்த நாள். இந்த நாளில் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து தட்சிணாமூர்த்தி, நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான் மற்றும் மகாலட்சுமியை வழிபட மங்களம் உண்டாகும்.

வெள்ளிக் கிழமை என்பது சுக்கிர பகவானுக்கு உகந்த நாள். இந்தக் கிழமைகளில் கடல் நீல நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் ஆடை அணிந்து நவக்கிரகத்தில் உள்ள சுக்கிர பகவானை வழிபாடு செய்ய வேண்டும். மேலும், வெள்ளை நிற பூக்கள் கொண்டு பிரார்த்தனை செய்து வந்தால் ஞானமும், செல்வமும் வளரும் என்பது ஐதீகம்.

சனி பகவானுக்குரிய கிழமை சனி. இந்தக் கிழமைகளில் அவருக்கு பிடித்த கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து, எள் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் சனி தோஷ பாதிப்பு குறைவதோடு, அவர் கொடுக்கும் கஷ்டங்களில் விடுவு காலம் பிறக்கும். மேலும், அன்றைய நாளில் உங்களால் முடிந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்ய வேண்டும்.

வாரத்தின் 7 நாட்களும் அணிய வேண்டிய ஆடையின் நிறங்கள்:

ஞாயிறு – சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு

திங்கள் – வெண்மை, சில்வர், ஊதா

செவ்வாய் – சிவப்பு, பிங்க், ஆரஞ்சு

புதன் – பச்சை

வியாழன் – மஞ்சள்

வெள்ளி – கடல் நீல நிறம், வெள்ளை

சனி – கருப்பு

ஆகையால், சனிக்கிழமையான இன்று ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு பிறந்ததால் தாராளமாக கருப்பு நிற ஆடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம். ஆனால், தவறாமல், சனி பகாவனையும், அவருக்கு அர்ச்சனை செய்வதையும், எள் விளக்கு போடுவதையும் மறக்காமல் செய்ய வேண்டும்.