பெண்கள் வளையல் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!

75

பெண்கள் ஏன் வளையல் அணிந்து கொள்கிறார்கள் தெரியுமா?

ஒவ்வொரு நாளும் நாம் பின்பற்றி வரும் ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதனை நாம் தெரிந்து கொள்வதும் இல்லை. அறிந்து கொள்வதும் இல்லை. ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்கும் முக்கிய காரணங்களை நமது முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது. ஏனென்றால், கருவறையில் இருக்கும் போது ரத்தம், சிறுநீர் ஆகிய சூழ்நிலையில் தான் இருக்கும். பிறக்கும் போது கழிவுகள் வெளியே வந்தாலும், கண்ணுக்கு தெரியாத சில கழிவுகள் தலையில் தான் இருக்கும். இந்த கழிவுகள் தலையின் தலைமுடி வழியாகத்தான் வெளியேற முடியும். ஆதலால், தான் பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுகிறார்கள். முதல் மொட்டை போடும் போது வெளியேறாத கழிவுகள் 2ஆவது மொட்டை போடும் போது வெளியேறும்.

இப்படி ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்கும் பின்னாடி ஒவ்வொரு காரணம் இருக்கும். அந்த வகையில், ஏன் பெண்கள் வளையல் அணிந்து கொள்கிறார்கள்? அதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்.

ஆடைக்கு ஏற்ற நிறங்களில் வளையல்:

படிக்கும் பெண்கள் அல்லது வேலைக்கு செல்லும் பெண்கள் தாங்கள் அணிந்து கொள்ளும் உடைக்கு ஏற்ப அந்தந்த நிறங்களில் வளையல்கள் அணிந்து கொள்ள ஆசைப்படுவர். அது அவர்களை மேலும் அழகுபடுத்திக் காட்டும் என்பதற்காக ஆடைகளுக்கு ஏற்ற நிறங்களில் வளையல்கள் அணிந்து கொள்கிறார்கள்.

திருமணத்திற்கு வளையல்:

பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் ஆகிய காரணங்களுக்காக திருமணத்தின் போது பெண்களுக்கு கை நிறைய வளையல் அணியப்படுகின்றது. ஏனென்றால், திருமணத்தின் போது வளையல் அணியும் போது அது ஒரு விதமான மங்கல சக்தியை அதிகரிக்கிறது. அதோடு, புது பெண் என்ற பொலிவையும் பெண்களுக்கு தருகிறது. மேலும், வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறவுள்ளதையும் இந்த வளையல் சத்தம் நினைவுபடுத்துகிறது.

கணவரின் அன்பு:

பெண்கள் வளையல் அணிந்து கொள்வது என்பது ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். மனைவி அணிந்து கொள்ளும் வளையல் மூலமாக வரும் சத்தமான கணவனுக்கு ஒருவிதமான அன்பையும், ஈர்ப்பையும் அதிகரிக்கும். இவ்வளவு ஏன், ரொமாண்டிக் உணர்வை அதிகரிக்கிறது.

தெய்வீகத்தன்மை:

தீய சக்திகளை விரட்டியடிக்கும் தன்மை பெண்கள் அணிந்து கொள்ளும் வளையல்களுக்கு உண்டு. ஏனென்றால், ஒவ்வொரு ஆடி மாதமும் அம்மனுக்கு வளையல் அணிவிக்கும் நடைமுறை காலங்காலமாக இருந்து வருகிறது. கண்ணாடி வளையலில் தேவியின் மகத்துவம் நிறைந்திருக்கிறது.

வளைகாப்பு:

பண்டைய காலங்களில் இருந்து கர்ப்பமான பெண்ணிற்கு வளைகாப்பு என்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது என்பது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கருவுற்ற பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியின் போது வளையல் அணிவிப்பது மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில், கலந்து கொள்ளும் ஒவ்வொரு பெண்ணிற்கு வளைகள் கொடுக்கப்படும். கர்ப்பிணி பெண்கள் வளையல் அணிந்து கொள்வதால், கருவில் இருக்கும் குழந்தைகளின் கேட்கும் திறனை அது அதிகப்படுத்துகிறது. கர்ப்பிணி பெண் நடந்து செல்லும் போது எதிரில் வருபவர்கள், அந்த வளையல் சத்தம் கேட்டு ஒதுங்கி செல்வார்கள். இதனால் கர்ப்பிணிப் பெண்ணிற்கு அதிக பாதுகாப்பு ஏற்படும்.

கண்ணாடி வளையல்:

கண்ணாடி வளையல் பெண்களின் பாதுகாப்பு கவசமாக திகழ்கின்றன. கண்ணாடி வளையல்களில் ஏதேனும் உடைப்பு அல்லது விரிசல் ஏற்பட்டிருந்தால் அந்த வளையலை அணியக் கூடாது. ஏனென்றால், உடைந்த வளையல்களில் தீய சக்திகள் வாசம் செய்யும்.

இரத்த ஓட்டம் அதிகரிக்கும்:

கையில் மணிக்கட்டு பகுதியைத் தான் மனிதர்களின் நாடித்துடிப்பை பார்ப்பதற்கு அதிகளவில் பிடித்து பார்ப்பார்கள். மணிக்கட்டுப் பகுதியில் வளையல் அணியும் போது அது தொடர்ந்து உராய்வு ஏற்படும் போது ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

உணர்ச்சிகளின் சமநிலை:

பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணியும் போது வலுவான உணர்ச்சிகளின் சமநிலையில் இருப்பதாக உணர்கிறார்கள். ஆனால், செயற்கை பொருட்களால் செய்யப்பட்ட வளையல்களை அணியும் போது அதிக உணர்ச்சி வசப்படுபவர்களாக திகழ்கிறார்கள்.

நன்மைகள்:

வளிமண்டலத்திலிருந்து நன்மை மற்றும் தூய்மைகளை உறிஞ்சி இயற்கையான சூழலில் நிலவும் சக்தி வாய்ந்த ஆற்றல்களை அதனை அணிந்து கொள்பவர்களுக்கு கொடுக்கிறது. கண்ணாடி வளையல்களின் சத்தமானது மென்மையானதாக இருப்பதால், கண்ணாடி வளையல் அணிந்து கொள்பவர்களுக்கு மட்டுமல்லாமல், உடனிருப்பவர்களுக்கும் மனநிலையையும் மேம்படுத்துகிறது.

வளையல்களின் பல்வேறு நிறங்கள்:

சிவப்பு நிற வளையல் அணிந்து கொள்வதால், தீ சக்திகளை விரட்டலாம். பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பெண்கள் இந்த நிறத்திலான வளையல்களை அதிகம் விரும்புகின்றனர்.

பச்சை நிற வளையல்கள் அணிந்து கொள்வதால் மன நிம்மதி கிடைக்கிறது. அதோடு, மகிழ்ச்சியும் அதிகரிக்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பச்சை நிற வளையல்களைத் தான் பெண்கள் அதிகளவில் விரும்புகின்றனர்.

இதன் காரணமாக, எப்போதும் சிவப்பு மற்றும் பச்சை நிற வளையல்களை மட்டும் அதிகளவில் அணிந்து கொண்டால் சிறந்த பலன் அளிக்கும்.