பெருமாள் கோயிலில் தீபாராதனையை தொட்டு கும்பிடலாமா?

42

பெருமாள் கோயிலில் தீபாராதனையை தொட்டு கும்பிடலாமா?

எல்லா கோயில்களிலும் இறைவழிபாட்டின் போது தீபாராதனை காட்டப்படும். அதனை தொட்டு பக்தர்கள் தங்களது கண்களில் ஒத்திக் கொள்ளலாம். ஆனால், பெருமாள் கோயிலில் மட்டும் தீப, ஆராதனையை பெருமாளுக்கு காட்டியவுடன், ஆரத்தியை கர்ப்ப கிரகத்திலேயே அர்ச்சகர் வைத்துவிடுவார்கள். அதன் பிறகு பக்தர்களுக்கு குங்குமமும், மஞ்சளும் கொடுப்பார்கள்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் பக்தர்களின் திருப்திக்காக பெருமாள் கோயிலில் அர்ச்சகர்கள் தீபாராதனையை வெளியில் எடுத்து வருகிறார்கள். உண்மையில், பெருமாள் கோயிலில் பெருமாளை தரிப்பது மட்டுமே பிரதானம். இந்தக் கோயிலில் ஜோதிக்கு முக்கியத்துவம் இல்லை. ஆனால், சிவன் கோயிலில் சிவபெருமான் ஜோதியின் ரூபம் என்பதால், ஜோதிக்கு அதிக முக்கியத்துவம் தேவை. ஆகையால், சிவன் கோயிலில் இறைவனுக்கு காட்டப்படும் தீபாராதனையை பக்தர்கள் தொட்டு கண்களில் ஒத்திக் கொள்ளலாம்.

ஆனால், இது போன்று பெருமாள் கோயிலில் செய்யக் கூடாது.