மாங்கா மடையன் விளக்கம் தெரியுமா?
பலரும் மாங்கா மடையன் என்று திட்டுவதை நாம் பார்த்திருப்போம் அல்லது நாமே திட்டும் வாங்கியிருப்போம். அப்படியும் இல்லையென்றால் நாம் மற்றொருவரை மாங்கா மடையன் என்று கூட திட்டியிருப்போம். உண்மையில் மாங்கா மடையன் என்பதற்கான விளக்கம் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் தெளிவாக காண்போம்.
‘மாங்காய்க்கும் மடத்தனத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?’ என்று பலமுறை யோசித்திருப்போம். முக்கனி என்னென்ன என்பது அனைவருக்கும் தெரியும். அதில் முதல் கனி மா, அதாவது மாங்காய். மாங்காய் மடையன் என்றால் ‘மா மடையன்’ அதாவது ‘மகா மடையன்’ என்று பொருள். மாம்பழத்திற்கும் மா என்றுதான் சொல்கிறோம். ஆனால் மாம்பழ மடையன் என்று யாரும் சொல்வது இல்லை .
மாங்காய் என்பது முதிர்ச்சி அடையாதது, பக்குவப்படாதது. எனவே ‘மாங்கா மடையன்’ என்பது மறைமுகமான பொருள் பொதிந்த சொற்பதம் தான் இது. மற்றொன்று, மாங்காய் கொட்டையானது பார்ப்பதற்கு பெரியதாக இருந்தபோதிலும் மற்ற காய்களுக்கு இருக்கும் சிறிய விதைகளுக்கான அதே வீரியம்தான் அதற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலர் பார்ப்பதற்கு மாங்கொட்டை போல பெரிய அறிவாளியாக தென்படுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் மடையனாக இருப்பார்கள்.
மற்றொரு விளக்கம்:
சிவன் கோயில் அர்ச்சகர் ஒருவர், உச்சி நேர பூஜைக்கு முக்கனிகள் கொண்டு பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக அங்கு இருந்த திருவாத்தானிடம் பலாவும், வாழையும் இருக்கிறது. ஆனால், மாங்காய் மட்டும் தான் இல்லை. ஆகையால் மாங்காய் மட்டும் பறித்துக் கொண்டு கூடவே கொஞ்சம் இலையும் பறித்துக் கொண்டு வா என்று சொன்னார். கொஞ்ச நேரத்துல மாங்காய்களோட திருவாத்தானும் வந்தான்.
எங்கே, மாவிலையக் காணோம் என்று அர்ச்சகர் கேக்க, திருவாத்தான் சொன்னான், ‘நீங்க காய்களப் பறிச்சிட்டு, அதுல கொஞ்சம் இலையும் பறிச்சிட்டு வர சொன்னீங்க. ஆனா, எந்தக் காய்லயும் இலைக இல்லை என்று சொன்னான். உடனே அர்ச்சகர் திருவாத்தானை கடுமையா திட்டிகினு இருந்தாரு.
அந்த நேரம் பார்த்து கோயிலுக்கு வந்த ஜமீன் (ஊர்த் தலைவர்), என்ன அர்ச்சகரே திருவாத்தானை திட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்கவே, ‘அவன் மாங்காய்ல இலை தேடுன மாங்கா மடையன்’ என்று சொல்லிட்டு, நடந்த அனைத்தையும் ஜமீன் கிட்ட சொன்னார். இப்படித்தாங்க, ‘மாங்கா மடையன்’ங்ற அடை சொல்லு பழக்கத்திற்கு வந்தது.