மாதாமாதம் வரும் பெளர்ணமி தினத்திற்கு இத்தனை சிறப்புகளா?

213

மாதாமாதம் வரும் பெளர்ணமி தினத்திற்கு இத்தனை சிறப்புகளா?

பெளர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோற்றம் அளிக்கும் தினம் . இந்தநாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும். இந்த  சக்தி மிகுந்த நாளில், அம்மன் வழிபாடு செய்வது தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும். அம்மன் கோயிலுக்குச் சென்று பெளர்ணமி நன்னாளில் வழிபடுவதால் வாழ்வில் அனைத்து துன்பங்களும் பனிபோல் விலகும்.

அதேபோல், பௌர்ணமி தினத்தன்று வீட்டில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவதும், வீடு மனை முதலான செல்வங்களை வாங்குகிற பாக்கியத்தைக் கொடுக்கும். ஒவ்வொரு பெளர்ணமியிலும் மாலையில், சந்திரன் தோன்றும் வேளையில், வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அம்பாளை ஆராதிப்பது விசேஷமானது. தம்பதி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் .

முக்கியமாக, பெளர்ணமி நாளில், குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. இந்த நன்னாளில், குலதெய்வக் கோயிலிக்கு சென்று வழிபட்டு வருவது நன்மைகளை வழங்கும். குலதெய்வ கோவிலுக்கு சென்று வர இயலாதவர்கள், வீட்டில் விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு செய்யலாம். குலதெய்வம் படத்துக்கு மாலையிட்டு, அல்லது பூக்களால் அலங்கரித்து, நைய்வேத்தியம் செய்து, வேண்டிக்கொள்ளலாம்.

ஐப்பசி பெளர்ணமி மட்டுமின்றி, சித்திரை முதற்கொண்டு பன்னிரு மாதங்களிலும் வரும் பெளர்ணமி திருநாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு. அமாவாசை மற்றும் பௌர்ணமி என்பது ஆன்மீகத்தில் மட்டுமல்ல, அறிவியலிலும் மிகவும் முக்கியமான நாட்கள். இந்த இரு நாட்களிலும் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு.

சித்திரை

தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரையில் வரும் பெளர்ணமி சித்ரா பௌர்ணமி. மனிதராக பிறந்த அனைவரின் செயல்களையும் சித்ர குப்தன் தான் கணக்கு வைத்துக் கொள்வார் என்பது நம்பிக்கை. சித்திரை மாதம் வரும் பெளர்ணமி  சித்ரகுபதனை வணங்கும் நாள். மதுரையில் மிகவும் சிறப்பாக அனுசரிக்கப்படும்.

சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், சித்ரா பெளர்ணமி அன்று சித்ரகுப்தனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். மேலும் சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது.

வைகாசி

அரக்கன் சூரனை அடக்க முருகன் அவதரித்த நாள். தீமைகள் அழியும், நன்மை நிலைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் தினம். திருச்செந்தூரின் அருகே இருக்கும் உவரி என்ற தளத்தில் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகம் என்று வைகாசி மாத பெளர்ணமி கொண்டாடப்படுகிறது.

ஆனி

ஆனி மாத பௌர்ணமி அன்று மா, பலா, வாழை உட்பட கனிகளை படைத்து இறைவனை வணங்குவது சிறப்பு. ஆனி பெளர்ணமி திருவையாற்றில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

ஆடி

ஆடி மாத பௌர்ணமி காக்கும் கடவுள் கலிவரதனுக்கு உகந்த நாள். காஞ்சிபுரத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.

ஆவணி

ஆவணி மாத பௌர்ணமி அவிட்டம் நட்சத்திரத்தன்று வரும். இன்று தான் சகோதர-சகோதரிகளை இணைக்கும் ராக்கி எனப்படும் ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி

புரட்டாசி பௌர்ணமி சிவசக்தியாக அருளும் உமாமகேஸ்வரரை வணங்கும் முக்கிய நாள். புரட்டாசி பெளர்ணமி தினத்தில் வீட்டில் விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவதாலும், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வில்வார்ச்சனை செய்து, நெய்தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடுவதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

ஐப்பசி

ஐப்பசி பௌர்ணமியன்று லட்சுமி விரதமும், சிவனுக்கு அன்னாபிஷேகமும் செய்வது சிறப்பு. கங்கை கொண்ட சோழபுரத்தில் மிகச் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது.

கார்த்திகை

கார்த்திகைப் பௌர்ணமியன்று திருவிளக்கு தீபத் திருநாள். மும்மூர்த்திகளும் சேர்ந்து திருவிளையாடல் நடத்திய நாள். திருவண்ணாமலையில் மலையே ஜோதிப்பிழம்பாக நின்று மக்களுக்கு அருளும் நாள். பெளர்ணமி தினத்தில் பொதுவாக கிரிவலம் செய்வது சிறப்பானது. அதிலும் கார்த்திகை பெளர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

மார்கழி

மார்கழி மாதப் பௌர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தன்று வரும். இறைவன் நடராஜராய் காட்சியளித்த திருநாள். சிதம்பரத்திலும், திரு உத்தர கோசமங்கையிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது மார்கழி மாத பெளர்ணமி.

தை

தை மாதத்தில் வரும் பௌர்ணமி பூச நட்சத்திரத்தன்று நிகழும். மதுரையிலும், பழனியிலும் மிகச் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

மாசி

மாசி மாதம் மகம் நட்சத்திர நாளன்று பெளர்ணமி வரும். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெற்கே கும்பகோணத்திலும், வடக்கே அலகாபாத்திலும் மிக்க சிறப்புடன் கொண்டாடப்படும். அனைத்து ஆலயங்களிலும் அனுசரிக்கப்படும் மாசி மகத்தன்று புனிதத் தலங்களில் நீராடி சிவனை தரிசிப்பது சர்வ பாபங்களையும் போக்கி வீடு பேற்றை அருளும்.

பங்குனி

பங்குனிப் பௌர்ணமி உத்திரம் நட்சத்திரத்தன்று வரும். சிவபெருமானுக்கும், அன்னை உமையாளுக்கும் திருமணம் நிகழ்ந்த நாள். பழனியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இத்தனை சிறப்புகளை கொண்ட பெளர்ணமி தினத்தன்று பிறந்தவர்களின் குணாதிசங்களை தெரிந்து கொள்வோமா?

எந்தவொரு பணியையும் நிறைவேற்றுவதற்கும் அதை முழுமையாக நிறைவு செய்வதற்கும் நீங்கள் விதிவிலக்காக திறமையானவர்.

உங்கள் முரண்பாடான சுயத்தின் வெவ்வேறு அம்சங்களை சமரசம் செய்வதில் நீங்கள் பயிற்சி பெற்றிருப்பதால், சிக்கலான சமூக சூழ்நிலைகளை பேச்சுவார்த்தை நடத்துவதில் உங்கள் திறமைக்கு நீங்கள் அறியப்படுகிறீர்கள், அங்கு மக்கள் வேறுபட்ட கருத்துக்களையும் முன்னோக்குகளையும் வைத்திருந்தாலும் கூட அவர்களை ஒருவருக்கொருவர் இணைக்க முடியும்.

நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர், தன்னிச்சையானவர், பச்சாதாபம் கொண்டவர், மிக முக்கியமாக, நீங்கள் யார் என்பதற்காக நீங்கள் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டீர்கள்.

உங்கள் அதிகரித்த ஆற்றல், நம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றுடன் இணைந்து, இந்த சந்திரன் கட்டத்தில் நீங்கள் தொடர விரும்பும் எந்த இலக்குகளிலும் நீங்கள் வெற்றிபெற வாய்ப்புள்ளது. கவனமாக இருக்க இது இன்னும் செலுத்துகிறது.

பௌர்ணமியில் பிறந்தவர்கள் புத்தர், குரு நானக் அவர்களே சான்று நல்வாழ்விற்கு எனபது குறிப்பிடத்தக்கது.